பிக் பாஸ் வீட்டிற்குள் புகுந்து அமர்க்களம் செய்த குரங்கு, இதான் உண்மையான Wild Card-ஓ ? – வைரல் வீடியோ.

0
558
biggboss
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கி 10 நாட்களை கடந்து உள்ளது. விஜய் டிவி புதிய கதைக்களத்துடன் இந்த நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி உள்ளது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வேறு. இந்த பிக் பாஸ் வேறு. இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், சுருதி, தாமரை, சுரேஷ் ஷாரிக், நிரூப் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர்.

-விளம்பரம்-

முதல் நாளே அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி புகை பிடிக்கும் வீடியோ, வனிதா குழாய் அடி சண்டை, நிரூப் முன்னாள் காதல் என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருந்தது. அதோடு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம், கலவரம் தொடங்கி விட்டது. இதனால் பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி விளையாடி வருகிறார்கள். மேலும், அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் நாளே போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டு இருந்தார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதலில் வெளியேறியது:

இதில் வனிதா, ஜூலி, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிநய், சுருதி, சினேகன், அனிதா, நிரூப் ஆகிய எட்டு பேர் வெளியேறுவதற்காக நாமினேஷன் பட்டியலில் இருந்தனர். அதில் இருந்து முதலில் சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் ஆகி இருக்கிறார். ஆனால், அடுத்த வாரம் முழுவதும் வீட்டில் கேப்டனாக இருக்க நடந்த போட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தி தான் வெற்றி பெற்றார். இதனால் கேப்டன் பதவியை சினேகனுக்கு கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். அதே போல இந்த வாரம் Trending Player Of The Week பெட்ரா வனிதாவும் இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்தார்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இரண்டாம் நாமிநேஷன்:

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இரண்டாம் நாமிநேஷன் நடந்து இருக்கிறது. அதுவும் இந்த முறை நேரடி நாமிநேஷன் நடத் தி இருக்கிறார்கள். அதில் போட்டியாளர்கள் நாமிநேஷன் செய்யும் நபரின் முகத்தில் மார்க் போட செய்து இருக்கிறார்கள். அப்படி நாமிநேஷன் செய்த போட்டியாளர்களில் சுஜா, ஜூலி, அபிநய், பாலாஜி முருகதாஸ் , தாடி பாலாஜி, தாமரை ஆகிய 6 பேர் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டுக்குள் திடீரென குரங்கு நுழைந்திருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் வீட்டுக்குள் குரங்கு:

அந்த வீடியோவில் பிக் பாஸ் வீட்டுக்குள் குரங்கு பயங்கரமான மாஸ் என்ட்ரி உடன் நுழைந்து கார்டன் ஏரியாவை சுற்றித் திரிகிறது. போலீஸ் ஸ்டேஷன், ஜெயில் என வெளியில் எல்லா இடத்திற்கும் சொல்கிறது. ஒரு வேளை வைல்ட் கார்ட் என்ட்ரி இவர் தானா? என்று கேட்கும் அளவிற்கு பிக் பாஸ் வீட்டில் குரங்கு சுற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால், போட்டியாளர்களுக்கு குரங்கு வந்தது தெரியாது. எல்லோரும் உள்ளே இருந்தார்கள். ஒருவர் கூட கார்டன் ஏரியாவில் இல்லை. அதேபோல் குரங்கும் எல்லா இடத்தையும் சுற்றி பார்த்து யாரும் இல்லைன்னு வெளியேறி சென்றது.

வைரலாகும் குரங்கு வீடியோ:

இப்படி பிக் பாஸ் வீட்டுக்குள் குரங்கு வந்து சென்ற வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், இரண்டாவது வாரத்தின் ஆரம்பத்திலேயே போலீஸ் திருடன் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் வனிதா பயங்கரமாக சண்டை போட்டு அதிலிருந்து வெளியேறிய வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகியிருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த வாரம் எழிமினேஷனில் வனிதா பெயர் இல்லை என்பதால் இவர் ஆட்டம் பயங்கரமாக இருக்கும் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இந்த வாரம் யார் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement