திடீர் திருமணம் செய்துகொண்ட மூடர் கூடம் நவீன்.! வெளியான புகைப்படம்.!

0
1496
Moodar-Koodam-Naveen
- Advertisement -

‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் நவீன். விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், இன்றளவும் நினைவுகூரத்தக்கப் படமாகவும் அமைந்துள்ளது. அந்தப் படத்துக்குப் பிறகு ‘கொளஞ்சி’ என்ற படத்தைத் தயாரித்துள்ளார்.

-விளம்பரம்-

அதைத் தொடர்ந்து, ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார். இதில், நவீனுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். முழுக்க முழுக்க வெளிநாட்டில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. பிக் பாக்கெட் அடிப்பவராக இந்தப் படத்தில் நடித்துள்ளார் ஆனந்தி.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் நவீன். ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படத்தை, அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். ‘அர்ஜுன் ரெட்டி’ ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார்.

இது ஒருபுறம் இருக்கு தற்போது நவீன், திடீர் பதிவு திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நவீன். அதுவும் சமத்துவ முறைபடி இந்த திருமணத்தை நடத்தியுள்ளார் நவீன்.

-விளம்பரம்-
Advertisement