விஜய் கூடவே படம் முழுக்க வர்றேன்..! முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன்.! பிரபல நடிகர்!

0
907
- Advertisement -

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வரும் ‘விஜய 62’ அப்டேட்ஸ்கள் இணையத்தளத்தில் நிரம்பிவழிந்து கொண்டிருக்கின்றாது. ஏற்கனவே இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், ராதா ரவி, வரலக்ஷ்மி போன்ற நட்சத்திர பட்டாளம் இருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம் தான். இந்நிலையில் இந்த படத்தில் விஜயுடன் நடித்தது குறித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் பிரேம்.

-விளம்பரம்-

vijay-62

- Advertisement -

தொலைக்காட்சி தொடர், நடன நிகழ்ச்சி என்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் பிரேம். சமீபத்தில் வெளியான ‘விக்ரம் வேதா ‘ என்ற சூப்பர் ஹிட் படத்திலும் மாதவனின் நண்பனாக வரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றார். தற்போது விஜய் 62 படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

சின்னத்திரை நடிகராக இருந்த பிரேம், இயக்குனர் சமுத்திர கனி இயக்கிய ‘அண்ணி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பின்னர் பல் படங்களில் துணை கதாபாத்திரத்திலும் ஒரு சில பங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்போது விஜய் 62 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இந்த தகவலை சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துளளார்.

-விளம்பரம்-

prem

சமீபத்தில் இது குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்த நடிகர் பிரேம் “இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன், ஏற்கனவே ஒரு சில காட்சிகளில் நடித்திவிட்டேன், இதையடுத்து இம்மாத இறுதியில் நடக்கவுள்ள படப்பிடிப்பில் நான் மீண்டும் பங்கேற்கவுள்ளேன். இந்த படத்தில் விஜய்யுடனே பயணிக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நான் நடித்துள்ள பெரும்பாலான காட்சிகள் விஜய்யுடனே தான் இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement