இந்திய சினிமாவை மிகவும் பிரபலமான இயக்குனராக இருக்கும் எஸ்.எஸ்.ராஜமௌலி பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர். இவர் இயக்கத்தில் சமீபாத்தில் வெளியான படம் RRR. இப்படத்தை டிவிவி என்டர்டைமென்ட் தயாரிக்க ராம் சரண் மற்றும் என்.டி.ஆர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்க RRR படம் பெரிய ஹிட் அடித்தது. அதிலும் இப்படத்தில் வரும் “நாட்டு நாட்டு” பாடல் திரைத்துறையில் மிகச்சிறந்த விருதான ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில் தான் கடந்த திங்கள் கிழமை இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு அமெரிக்காவில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விழாவில் சிறந்த பாடலுக்கான விருதை RRR படத்தின் “நாட்டு நாட்டு” பாடல் தட்டிச் சென்றது. இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கார் விருதை பெற்றனர். அதோடு இந்தியாவில் இருந்து சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பெற்ற இரண்டாவது நபராக எம்.எம்.கீரவாணி உள்ளார்.

Advertisement

இயக்குனர் மற்றும் நடிகர் மௌலி :

இந்த நிலையில் தான் தற்போது ஆஸ்கர் விருதை வென்றிருக்கும் கீரவாணியை அறிமுகப்படுத்திய இயக்குனரான மௌலி சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கீரவாணி எப்படி இசையமைப்பாளராக அறிமுகமாக்கினார் என்பது குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் “நாட்டு நாட்டு” பாடலுக்கு ஆஸ்கர் கிடைத்து இந்தியாவிற்கே பெருமை. நான் என்னுடைய படமான “மனசு மமதா” படத்தில் கீரவாணியை அறிமுகப்படுத்தும் போதே அவருக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று தெரியும்.

கீரவாணியின் முதல் படம் :

நான் அதிக தெலுங்கு படங்களை இயக்கியிருக்கிறேன். அப்போது என்னுடைய பல படங்களுக்கு இசையமைப்பாளர் கீரவாணி உதவிக்கு வருவார். இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகத்தை அறிமுகப்படுத்திய போது அவரிடம் கீரவாணி வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது படத்திற்கு தேவையான சுவரங்களை கீரவாணி மூலமாகத்தான் வாங்கினேன். பின்னர் ஒரு கட்டத்தில் அவரரே இசையமைத்து கொடுக்க சொன்னேன். அந்த படம் தான் “மனசு மமதா”. அந்த படம் பாடலுக்கு முக்கியத்தும் இல்லாத படமாக இருந்தாலும் அதில் சரியாக அமைத்து கொடுத்தார்.

Advertisement

மனசு மமதா படத்தின் வெற்றிக்கு பிறகு இந்தியாவின் முதல் விளையாட்டு படமான “அஸ்வினி” படத்தை எடுத்தேன். அந்த படத்தில் கீரவாணி இசையமைத்த அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட். பின்னர் அவருக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்து. எனக்கும் அது மகிழ்ச்சியாக இருந்தது. பொதுவாக இயக்குனர்கள் நடிகர்களை அறிமுகப்படுத்துவார்கள் ஆனால் நான் தொழில்நுட்ப வல்லுனர்களை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினேன்

Advertisement

டெக்னீஷியன்களை அறிமுகப்படுத்திய காரணம் :

ஏன்னென்றால் உதவியாகவே இருப்பவர்கள் ஒருகட்டத்தில் அழுத்துப்போய் வாய்ப்பே கிடைக்காது என்ற நிலைமைக்கு தள்ளப்படுவார்கள். அதனால் தான் நல்ல திறமையான சினிமா வல்லுநர்களை அறிமுகப்படுத்தி வந்தேன். வேலு பிரபாகரன், பி.சி.ஸ்ரீராம், கன்னடத்தில் பிரசித்தி ராஜ் போன்றவர்களை நான் தான் அறிமுகப்படுத்தினேன். பல பேர் அதிர்ஷ்டத்தால் முன்னேறுவார்கள் ஆனால் கீரவாணி தன்னுடைய முயற்சியினால் முன்னேறியுள்ளார். நான் அவரை அறிமுகப்டுத்தும் போதே பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று தெரியும்.

அவரது விடா முயற்சிதான் காரணம் ;

நான் எல்லா படங்களையும் கே.பாலச்சந்திரர் அவர்களுக்கு போட்டு காட்டுவேன். அவர் அப்படி பார்த்துதான் யார் இவர் என்று கேட்டு “அழகன்” படத்தில் கீரவாணிக்கு வாய்ப்பு கொடுத்தார். கீரவாணிக்கு ஆஸ்கார் தாமதம் தான். மேலும் தற்போது அவர் மிகவும் பிசியாக இருப்பார் என்றும், இந்த பரபரப்பு அடங்கியா பின்னர் நான் பேசப்போகிறேன் என்று கூறினார். மேலும் தான் வாய்ப்பு கொடுத்தனால் அவர் வெற்றியடைந்தார் என்று பீற்றிக்கொள்ளக்கூடாது. கீரவாணி தன்னுடைய விட முயற்சியினால் முன்னேறினார் என நெகிழ்ந்து பேசினார் இயக்குனர் மௌலி.

Advertisement