ரவீனாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை பதிவிட்ட வருண் – என்னமா ரொமான்ஸ் பண்றாங்க.

0
649
mounaragam
- Advertisement -

மௌனராகம் சீரியலில் வருண் – சக்தியின் ரொமான்டிக் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுக்கும் சீரியல்களில் ஒன்று தான் மௌனராகம். மௌனராகம் சீசன் 1 சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. கொரோனா லாக் டவுன் காரணமாக அந்த சீரியல் நிறுத்தப்பட்டிருந்தது. பின் மௌனராகம் சீசன் 2 என்று புதிய அத்தியாயத்துடன் சீரியல் வெளிவந்தது.

-விளம்பரம்-

மௌனராகம் சீசன் ஓன்னைவிட சீசன் 2-க்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், இந்த சீரியல் தொடங்கியதில் இருந்தே டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் வகிக்கிறது. இந்த சீரியல் கடந்த சில வாரங்களாகவே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கின்றது. அதுவும் நாளுக்கு நாள் அடுத்து என்ன? என்ற ஆர்வத்துடன் விறுவிறுப்பாக சீரியல் செல்வதால் இளைனர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பி பார்த்து வருகின்றனர்.

- Advertisement -

மௌனராகம் சீரியல்:

தற்போது சீரியலில் ஸ்ருதி கர்ப்பமாக இருப்பதாக வீட்டில் உள்ள அனைவரையும் பொய் சொல்லி ஏமாற்றி இருந்தார். இதனால் எல்லோருமே சந்தோஷமாக இருந்தார்கள். பின் சுருதி தன்னுடைய அம்மா, பாட்டி இடம் உண்மையை சொன்னவுடன் சக்தி மேல் இந்த பழியை போட்டு விடலாம் என்று மாடியிலிருந்து சக்தி கீழே தள்ளி விடுவது போல சுருதி டிராமா செய்து கரு கலைந்து விட்டது என்று பொய் சொல்கிறார். இதை நம்பி ஸ்ருதியின் கணவன் தருண் , வருண் – சக்தி இடம் சண்டை போடுகிறார்.

சீரியலின் டீவ்ட்ஸ்:

பின் சக்திக்கு சுருதி கர்ப்பமாகவில்லை, கரு கலைந்ததெல்லாம் நாடகம் என்று உண்மை தெரிய வருகிறது. இதை ஸ்ருதியிடமே நேரடியாக கேட்கிறார். இதையெல்லாம் வருண் ஒளிந்து நின்று கேட்டுவிட்டு ஸ்ருதியிடம் சண்டை போடுகிறார். மேலும், வீட்டில் உள்ள எல்லோருக்குமே ஸ்ருதியுடைய உண்மையான முகம் தெரிய வருகிறது. இதனால் எல்லோருமே அதிருப்தியிலும், கோபத்திலும் இருக்கிறார்கள். இனி தருண், சுருதியை ஏற்பாரா? சுருதி நிலை என்ன? என்ற பல எதிர்பார்ப்புடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

ரவீனா குறித்த தகவல்:

மேலும், இந்த சீரியலில் சக்தி கதாபாத்திரத்தில் நடிப்பவர் ரவீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது சின்னத்திரை, வெள்ளி துறையிலும் கலக்கிக் கொண்டு வருகிறார். ரவீனா பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருப்பார். தான் அடிக்கடி எடுக்கும் ரீல்ஸ் வீடியோக்களையும், புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். இது மட்டும் இல்லாமல் ரவீனா youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

ரவீனா பதிவிட்ட வீடியோ:

இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இந்த நிலையில் ரவீனா வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகிவருகிறது. அதாவது, மௌனராகம் சீரியலில் ரவீனாவுக்கு ஜோடியாக வருண் கதாபாத்திரத்தில் நடிப்பவர் சல்மான். இவருடன் நெருக்கமான ஒரு ரீல்ஸ் வீடியோ ஒன்றை யூடியூபில் ரவீனா பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும், இவர்கள் சீரியலில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் நன்றாக இருக்கிறார்கள் என்றெல்லாம் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement