வாத்தி கம்மிங் ஒத்தே – ராட்சசன் பட பிரபலத்தை இன்பராஜ் மீம் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்.

0
1703
raveena
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கதா இடத்தை பிடித்து விடுகிறார்கள். பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான். அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் மகத்தான வெற்றி கொடுத்த என்னைஅறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் தல அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-

தல அஜித் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளி வந்த “என்னை அறிந்தால்” படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்தர். மேலும், விசுவாசம் படத்தில் கூட அஜித்தின் மகளாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் சமீப காலமாக போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதையும் பாருங்க : திரிஷ்யம் 2’ படத்தை தமிழ் படம் 2-ஓடு ஒப்பிட்ட சி எஸ் அமுதன் – ரசிகர்களின் பதில்கள்.

- Advertisement -

இவர் நடத்தும் சில போட்டோ ஷூட்கள் வயதை மீறி இருப்பதாகவும் நெட்டிசன்கள் கமன்ட் செய்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் போட்டோ ஷூட்டில் அனிகாவையே மிஞ்சியுள்ளார் ரவீனா தாஹா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து வரும் இவர் ராட்சசன் படத்தில் கூட நடித்து இருந்தார்.

மேலும், விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா படத்தில் கூட குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோஷூட்களை நடத்துவது வழக்கம்.அந்த வகையில் தற்போது இவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் மார்டன் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்தரசிகர்கள் ராட்சசன் படத்தில் சோடா புட்டி கண்ணோடியோடு நடிச்ச பொண்ணா இது..? வாத்தி கம்மிங் ஒத்தே.. என்று மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள். .

-விளம்பரம்-

நடிகை ரவீனா, ராட்சசன் படத்திற்கு பின்னர் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை ஆனால், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா தொடரில் நடித்து வந்தார், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் 2 தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரவீனா.

Advertisement