அஜித்துடன் இப்படியா..? மௌன ராகம் சீரியல் குழந்தையின் ஆசை.! தல இதை செய்வாரா..?

0
796

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘மௌனராகம்’ என்ற சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியலில் ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் பேபி ஷெரின். வெறும் 4 வயதிலே சீரியலில் நடிக்க ஆரம்பித்த ஸ்ருதி சன் டிவியில் ஒளிபரப்பான ”பாசமலர்’ சீரியலில் நடிக்க துவங்கினார்.

mouna ragam sherin

- Advertisement -

ஆனால், அதற்கு முன்பாகவே நடிகர் சிபிராஜ் நடித்த ‘ சத்யா’ படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தகாரர். தற்போது தொடர்ந்து சீரியலில் நடித்து வரும் பேபி ஷெரின் எஸ் ஏ சந்திரசேகர் நடிப்பில் வெளியான “ட்ராபிக் ராமசாமி ” என்ற படத்திலும் நடித்திருந்தார்.

மௌன ராகம் சீரியலில் குட்டி வில்லியாக நடித்து அசத்தி வரும் பேபி ஷெரின் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது “விஜய் அங்கள் என்னோடைய படத்த பார்த்து நல்லா இருக்குனு சொன்னாரு’ என்று கூறியுள்ளார். மேலும் , அஜித் பற்றி பேசுகையில் ‘எனக்கு அஜித் சார் படத்துல அவரது மகளா நடிக்கணும்னு ஆசையா இருக்கு.

-விளம்பரம்-

எனக்கு அஜித் அங்கள ரொம்ப பிடிக்கும். அவர் கூட எப்படின்னா ஒரு படத்துல நடிக்கணும் அது தான் எனக்கு ஆச’ என்று மிகவும் க்யூடாக பேசி இருக்கிறார். அஜித்துடன் நடிக்க இதுவரை பல கதாநாயகிகள் நடிக்க தங்களது விருப்பங்களை தெரிவித்திருக்கின்றனர். தற்போது பேபி ஷெரினும் அஜித்துடன் நடிக்க விரும்பியுள்ள அவரது ஆசை நிறைவிவேறமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement