மௌன ராகம் பிரபலத்துக்கு திடீர் நிச்சயதார்த்தம் -அழகிய ஜோடிகளின் புகைப்படம் இதோ.

0
753
mouna
- Advertisement -

மௌன ராகம் சீரியல் தருணுக்கு திடீரென நிச்சயதார்த்தம் நடந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுக்கும் சீரியல்களில் ஒன்று தான் மௌனராகம். மௌனராகம் சீசன் 1 சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால், கொரோனா லாக் டவுன் காரணமாக இந்த சீரியல் நிறுத்தப்பட்டிருந்தது. பின் சில மாதம் கழித்து மௌனராகம் சீசன் 2 என்ற புதிய அத்தியாயத்துடன் சீரியல் வெளிவந்தது. மௌனராகம் சீசன் ஓன்னைவிட சீசன் 2-க்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

-விளம்பரம்-

சீரியலில் வருண், சக்தியை காதல் திருமணம் செய்து கொள்கிறார். அதேபோல் தருண், ஸ்ருதியை திருமணம் செய்து கொள்கிறார். சில மாதங்களுக்கு முன்பு தான் ஸ்ருதி-சக்தி இருவரும் அக்கா, தங்கை என்ற உண்மை மனோகரன் குடும்பத்திற்கு தெரியவந்தது. இதனால் சீரியலில் பல திருப்பங்கள் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியல் தொடங்கியதில் இருந்தே டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் வகிக்கிறது. அதுமட்டுமில்லாமல் மௌனராகம் சீரியல் கடந்த சில வாரங்களாகவே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கின்றது.

- Advertisement -

மௌன ராகம் சீரியல்:

அதுவும் நாளுக்கு நாள் அடுத்து என்ன என்ற ஆர்வத்துடன் விறுவிறுப்பாக சீரியல் செல்வதால் இளைனர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பி பார்த்து வருகின்றனர். தற்போது சீரியலில் ஸ்ருதி வருணை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று தன்னுடைய தாத்தாவுடன் சேர்ந்து திட்டம் போடுகிறார். இதற்கு ஷீலாவும் உறுதுணையாக இருக்கிறார். இன்னொரு பக்கம், ஷீலா கொடுக்கும் மாத்திரையின் உண்மையை சக்தி கண்டுபிடித்து வீட்டில் உள்ள எல்லோரிடமும் கூறுகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த வருணின் தந்தை ஷீலாவை அடித்து வெளியே போக சொல்கிறார்.

சீரியலின் கதை:

இனி ஷீலா சக்தியை பழி வாங்குவாரா? வருணனின் நிலைமை என்ன? என்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் மௌனராகம் சீரியல் நடிகர் தருணுக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. மௌனராகம் சீரியலில் தருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ராகுல் ராமச்சந்திரன். இவர் மௌனராகம் சீரியலில் முலம் தான் தமிழ் மொழியில் அறிமுகமாகி இருக்கிறார்.

-விளம்பரம்-

தருண் ராகுல் குறித்த தகவல்:

சீரியலில் இவர் ஹீரோ வருணின் தம்பியாகவும், வில்லி ஸ்ருதியின் கணவராகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். மௌனராகம் சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் மலையாளத்திலும் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக மலையாள மனோரமா சேனலில் சம்பந்தம் என்னும் சீரியலில் இவர் ஹீரோவாக நடித்து வருகிறார். இது மலையாள சின்னத்திரையில் சூப்பர் ஹிட் அடித்த தொடர்.

ராகுல்-அஸ்வதி நிச்சயதார்த்தம்:

இப்படி ஒரு சூழ்நிலையில் ராகுலுக்கு தனது பல ஆண்டு காதலியான அஸ்வதியுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து இருக்கிறது. ஏற்கனவே ராகுல் தன்னுடைய காதலி அஸ்வதியுடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களையும் பகிர்ந்து இருந்தார். சமீபத்தில் தான் இவர்கள் இருவரும் காதலிப்பதை உறுதிப்படுத்தி இருந்தார்கள். தற்போது கேரளாவில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் தருணுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement