சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த மௌன ராகம் சீரியல் பிரபலம் – இதோ புகைப்படம்.

0
1603
- Advertisement -

மௌன ராகம் சீரியல் நடிகரின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த சீரியல்களில் ஒன்று தான் மௌனராகம். மௌனராகம் சீசன் 1 சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. பின் கொரோனா லாக் டவுன் காரணமாக இந்த சீரியல் நிறுத்தப்பட்டது. அதன் பின் சில மாதம் கழித்து மௌனராகம் சீசன் 2 என்ற புதிய அத்தியாயத்துடன் சீரியல் வெளிவந்தது.

-விளம்பரம்-

மேலும், மௌனராகம் சீசன் ஓன்னைவிட சீசன் 2-க்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. சீசன் 1ல் இருந்த பிள்ளைகள் வளர்ந்து பெரிய பெண்களாக மாறி விடுகிறார்கள். அதற்கு பின் நடக்கும் சுவாரசிய கதை தான் மௌனராகம் 2. இந்த சீசனில் வருண், சக்தியை காதல் திருமணம் செய்து கொள்கிறார். அதேபோல் தருண், ஸ்ருதியை திருமணம் செய்து கொள்கிறார்.

- Advertisement -

மௌனராகம் 2 சீரியல் :

பின் சுருதி எப்படியாவது சக்தி வாழ்க்கையை கெடுக்க நினைக்கிறார். இருந்தாலும், வருண் காப்பாற்றி விடுகிறார். இறுதியில் சுருதி வேறு ஒருவரின் மகள் என்பது தெரிய வருகிறது. பின் வழக்கம் போல் அனைவரும் திருந்தி ஒன்றாக வாழ்வது போல் கதையை முடித்து விடுகிறார்கள். மேலும், இந்த சீரியல் தொடங்கியதில் இருந்து முடியும் வரை டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் வகுத்து இருந்தது.

சீரியலில் தருண் ரோலில் நடித்தவர்:

இந்த சீரியலை இளைனர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பி பார்த்து இருந்தார்கள். ஆனால், சீக்கிரமாக இந்த சீரியல் முடிந்தது பலருக்கும் வருத்தம் தான். இந்த நிலையில் மௌனராகம் சீரியல் நடிகர் தருணுக்கு திருமணம் நடந்து இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. மௌனராகம் சீரியலில் தருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் ராகுல் ராமச்சந்திரன்.

-விளம்பரம்-

ராகுல் குறித்த தகவல்:

இவர் மௌனராகம் சீரியலில் முலம் தான் தமிழ் மொழியில் அறிமுகமாகி இருக்கிறார். சீரியலில் இவர் ஹீரோ வருணின் தம்பியாகவும், வில்லி ஸ்ருதியின் கணவராகவும் நடித்து இருந்தார். இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் மலையாளத்திலும் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக மலையாள மனோரமா சேனலில் சம்பந்தம் என்னும் சீரியலில் இவர் ஹீரோவாக நடித்து இருக்கிறார். இது மலையாள சின்னத்திரையில் சூப்பர் ஹிட் அடித்த தொடர்.

ராகுல்-அஸ்வதி திருமணம் :

இப்படி ஒரு சூழ்நிலையில் ராகுலுக்கு தனது பல ஆண்டு காதலியான அஸ்வதியுடன் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நடந்து முடிந்தது. இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. பின் அனைவரும் திருமணம் எப்போ? என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தார்கள். இந்த நிலையில் சமீபத்தில் தான் ராகுல்-அஸ்வதி திருமணம் நடந்து முடிந்துள்ளது. தற்போது இவர்கள் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் மணமக்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

Advertisement