மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நடிகை சன்னிலியோன் பாடலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஹாலிவுட்டில் பாலியல் ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர் சன்னி லியோன். பின்னர் இவர் திரைப்படங்களில் நடிகையாக மாறினார். தற்போது ஹிந்தி திரையுலகில் சன்னி லியோன் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். மேலும், இவர் ஹிந்தி, தமிழ், மலையாளம் என்று பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

அதன் பின்னர் வீரமாதேவி என்ற படத்திலும் நடித்து வருகிறார். உலகம் முழுவதும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இந்நிலையில் நடிகை சன்னி லியோன் ஆடிய மியூசிக் ஆல்பம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த பாடல் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் ஆபாச நடிகை சன்னி லியோனை கைது செய்ய வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

ஆபாச நடிகை சன்னி லியோன் :

அதே போல மத்திய பிரதேச அமைச்சர் நரோதம் மிஸ்ரா அவர்கள் சன்னிலியோனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த பாடலை நீக்க வேண்டும் என்று கெடு வைத்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. நடிகை சன்னி லியோன் மற்றும் கனிகா கபூர் ஆகியோர் இணைந்து Madhuban mein Radhika என்ற ஒரு ஆல்பம் பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோவை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் சரிகம மியூசிக் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்த பாடலில் நடிகை சன்னி லியோன் மிக கவர்ச்சிகரமான நடனத்தை ஆடி இருக்கிறார்.

சர்ச்சையில் சிக்கிய பாடல் :

இந்தப்பாடல் வெளியானதிலிருந்து சோசியல் மீடியாவில் கடுமையான எதிர்ப்பு வந்து கொண்டிருக்கின்றது. மேலும், உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்த இந்து மத சாமியார்கள்கள் சன்னிலியோனின் இந்த பாட்டு இந்து மத உணர்வுகளை புண்படுத்தி இருப்பது மட்டுமில்லாமல் அருவருக்கத்தக்க ஆட்டத்தையும் ஆடியிருகிறார். அதோடு ராதையின் பெயரால் இந்த பாடல் அரங்கேறி இருப்பது மிகவும் தவறான செயல். இந்த பாட்டை உடனடியாக நீக்க வேண்டும் என்று அவர்கள் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள்.

Advertisement

அமைச்சரின் எச்சரிக்கை :

இந்நிலையில் மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சரான நரோதம் மிஸ்ரா அவர்கள் சன்னி லியோனின் இந்த பாடலுக்கு எச்சரிக்கை விடுத்து டீவ்ட் போட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பது, சிலர் தொடர்ந்து இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தி வருகின்றனர். ராதை எங்களுடைய கடவுள். அவரை நாங்கள் தெய்வமாக வணங்குகிறோம். அவருக்கு பல இடங்களில் கோவில்களும் உள்ளன. ஷாரிஃப் தனது மதத்தை குறிப்பிட்டு இப்படி ஒரு பாடலை உருவாக்குவாரா? சன்னி லியோன், ஷாரிஃப் மற்றும் தோஷி ஆகியோர் இதனை புரிந்து கொள்ள வேண்டும் என நான் எச்சரிக்கிறேன்.

Advertisement

கோரிக்கையை ஏற்ற சரிகம நிறுவனம் :

அதுமட்டுமில்லாமல் அடுத்த மூன்று தினங்களில் இந்த பாட்டை நீக்க வேண்டும். நீக்காவிட்டால் அவர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் பதிவிட்ட டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து அமைச்சரின் எச்சரிக்கையை உணர்ந்த சரிகம நிறுவனம் கூறியது, மதுபான் பாட்டு ஏற்படுத்திய இந்த சர்ச்சைக்கு சக நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த பாட்டின் தலைப்பு மற்றும் பாடல் வரிகளை மாற்றி அமைக்க இருக்கிறோம். பழைய பாட்டுக்கு பதிலாக புதிய பாடல் உருவாக்கி அனைத்து தளங்களிலும் அடுத்த மூன்று நாட்களில் மாற்றப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Advertisement