காவி சர்ச்சையில் சிக்கிய ‘பதான்’ பாடல் – காவி மற்றும் பச்சை உடையாய் மாற்ற வேண்டும். போர் கொடி தூக்கிய பாஜக அமைச்சர்

0
355
- Advertisement -

காவி சர்ச்சையில் ஷாருக்கானின் பதான் படத்தின் பாடல் சிக்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஷாருக்கான். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் எல்லாம் கோடிக்கணக்கில் வசூல் செய்து இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இவர் இந்தியில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். அதே போல இவரது படங்கள் தமிழிலும் டப் செய்து வெளியாகியிருக்கிறது. இப்படி இவர் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவது ரசிகர்களை கொண்டு இருக்கிறார். தற்போது ஷாருக்கான் அவர்கள் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

- Advertisement -

அட்லீ – ஷாருக்கான் கூட்டணி:

இந்த படத்திற்கு லயன் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படம் அதிரடி ஆக்சன் கதைக்களத்தை கொண்டது ஆகும். அதோடு இந்த படம் ஒரு வங்கியை ஹீரோ கொள்ளையடிக்கும் கதை அம்சத்தை கொண்டது என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பதான் படம்:

இதனை அடுத்து ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பதான். இந்த படத்தில் தீபிகா படுகோன் நடித்திருக்கிறார். சித்தார்த் ஆனந்த் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கிறது. இந்த படம் இந்தியில் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இந்த படம் ஜனவரி 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு இருக்கிறது. மேலும், ஷாருக்கானின் பிறந்த நாளை முன்னிட்டு பதான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருந்தது. இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.

-விளம்பரம்-

பாடல் குறித்த சர்ச்சை:

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல் குறித்த ஒரு சர்ச்சை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, பதான் படத்தின் ‘பேஷரம் ரங்’ பாடல் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்த பாடல் வெளியான சில மணி நேரத்திலேயே ஏராளமான வியூவர்ஸ்களை பெற்றிருந்தது. மேலும், இந்த பாடலில் தீபிகா படுகோன் கவர்ச்சி தோற்றத்தில் நடனமாடி இருப்பார். அதுமட்டும் இல்லாமல் பாடலில் நடிகை தீபிகா படுகோன் காவி நிறத்தில் படு கவர்ச்சியாக உடை அணிந்தும், கதாநாயகனான ஷாருக்கான் பச்சை நிறம் அணிந்தும் நடனமாடி இருந்தனர். இதனால் இது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள்.

நரோத்தம் மிஸ்ரா சொன்னது:

இந்நிலையில் இது கருத்து மத்திய பிரதேச அமைச்சர் டாக்டர் நரோத்தம் மிஸ்ரா கூறி இருப்பது, இந்த பாடலில் காவி மற்றும் பச்சை நிறத்திலான ஆடைகள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதோடு இந்த பாடலில் சில காட்சிகள் தவறான மனநிலையை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. அவற்றை நீக்க வேண்டும். இல்லையென்றால் இந்த படம் மத்திய பிரதேசத்தில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்படும். எங்கள் மாநிலத்தில் வெளியிடலாமா? வேண்டாமா? என்பதை பற்றி நாங்கள் தான் யோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். தற்போது மத்திய உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவின் இந்த பதிவு பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement