எங்களுக்கு வேற வழி தெரியல - Mr.Mrs சின்னத்திரையில் இருந்து வெளியேறிய காரணம் குறித்து சொன்ன மணிகண்டன் -சோபியா

By Rajkumar · 23/8/2021

தொலைக்காட்சிகள் அனைத்தும் சீரியலை தாண்டி பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதில் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுவிடுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பட்ட மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை சீசன் 3 கடந்த சில வாரங்களுக்கு முன் துவங்கியது.

இதில் குக்கு வித் கோமாளி சீசன் 2 வில் போட்டியாளராக கலந்து கொண்ட தீபா தனது கணவருடன் கலந்து கொண்டுள்ளார். அதே போல குக்கு வித் கோமாளியில் கலக்கிய சரத்தும் தனது மனைவியுடன் கலந்து கொண்டுள்ளார். மேலும், யோகேஷ் - நந்தினி, மணிகண்டன் - சோபியா, வேல்முருகன் - காலா, யுவராஜ் - காயத்ரி என்று மொத்தம் 12 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதையும் பாருங்க : லெஜண்ட் உடன் - கௌண்டமணியை அவரது வீட்டில் சந்தித்து புகைப்படம் எடுத்து பதிவிட்ட Sk.

இந்த 12 போட்டியாளர்களில் பிரபல நடிகையின் அண்ணன் அண்ணியும் போட்டியாளர்களாக கலந்துகொண்டு இருக்கின்றனர். அது வேறு யாரும் இல்லை பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் தான். இப்படி ஒரு நிலையில் மணிகண்டன் - சோபியா ஜோடி இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருந்தனர். இதற்கான காரணத்தை அவர்கள் தற்போது கூறியுள்ளனர்.

அதில் 'தாமதமாக பதில் அளிப்பதற்கு சாரி, என்னுடைய இன்பாக்ஸ் முழுவதும் ஏன் நீங்கள் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் பங்கேற்கவில்லை என்ற அன்புத் தொல்லையால் நிறைந்து இருக்கிறது. எனக்கு சில உடல்நல பிரச்சனை காரணமாக மருத்துவர்கள் என்னை ஓய்வு எடுக்கச் சொல்லி அறிவுறுத்தி இருக்கிறார்கள். எனவே, நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை. ஆனால், கண்டிப்பாக வைல்ட் கார்டு சுற்றில் மீண்டும் வருவோம். அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி' என்று பதிவிட்டு இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full