லெஜண்ட் உடன் – கௌண்டமணியை அவரது வீட்டில் சந்தித்து புகைப்படம் எடுத்து பதிவிட்ட Sk.

0
2183
sivakarthi
- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி சக்கரவர்த்தியாக திகழ்ந்து வந்தவர் நடிகர் கௌண்டமணி. தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்தாலும் கவுண்டமணி காமெடிகள் தற்போதும் ரசிகர்களால் விரும்பப்படும் வருகிறது. எப்போதும் இவரது காமெடிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக இருந்து கொண்டு தான் வருகிறது.ரஜினி கமல் காலம் தொடங்கி தற்போது நிறைய நடிகர்கள் வரை கவுண்டமணி பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

மேலும், இவர் செய்த காமெடிகள் தான் தற்போதுள்ள பல்வேறு காமெடி நடிகர்களின் ரோல் மாடலாக இருந்து வருகிறது. கடந்த சில காலமாக உடல்நிலை குறைவால் இருந்து வரும் கவுண்டமணி படங்களில் இருந்து நடிப்பதையும் நிறுத்தி விட்டார்.80 காலகட்டங்களில் தொடங்கி 20 காலம் முதல் பல்வேறு படங்களை நடித்துள்ளார் கௌண்டமணி. மேலும் , இவருக்கென்று மூன்று தலைமுறை ரசிகர்களும் இருந்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : இந்நேரம் நாளைக்கு ருத்திர தாண்டவம் ட்ரைலர் வந்ததும் அவனுங்க கதறுவானுங்க – கேலி செய்த ரசிகர், மோகன் ரியாஷன பாருங்க.

- Advertisement -

இறுதியாக 2016 ஆம் ஆண்டு வாய்மை என்ற படத்தில் நடித்திருந்தார். இறுதியாக கிரேசி மோகனின் இறுதி சடங்கு நடைபெற்றது இதில் திரையுகை சென்ற பல்வேறு நடிகர் நடிகைகளும் கலந்து கொண்ட போது கிரேசி மோகனுக்கு இறுதி அஞ்சலியை தெரிவித்திருந்தனர்.இதில் கௌண்டமணியும் கலந்து கொண்டார்.அப்போது தான் இவர் மீடியா கண்களுக்கு பட்டது. அதன் பின்னர் இவரை வெளியில் கூட காண முடிவதில்லை

இப்படி ஒரு நிலையில் கௌண்டமணியை அவரது இல்லத்திலேயே சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன். அந்த புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன், லெஜண்ட் உடன், பல மகிழ்ச்சிகளை கொண்ட சிறப்பான தருணம், என்றும் நினைவில் இருக்கும் நாள் ஆல் டைம் பேவரைட் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement