பல உருவ கேலிகள், அவமானங்கள் – அனைத்தும் கடந்து சாதித்த சரத் – கிருத்திகா கடந்து வந்த பாதை.

0
527
sarath
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு காமெடி நடிகர்கள் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்கள். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த தீனா சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி இருந்த கைதி படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. ஆனால், இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் இவர் சரத் என்பவருடன் இணைந்து தீனா செய்த காமெடிகள் நாம் யாராலும் மறக்க முடியாது.

-விளம்பரம்-

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இவரது பார்ட்னராக இருந்த சரத், பார்ப்பதற்கு அச்சு அசலாக திரைப்பட நடிகர் மொட்டை ராஜேந்தர் போன்று இருந்தார். மேலும், இவர் தீவுடன் இணைந்து மொட்டை ராஜேந்திரன் பேசி அசத்தி காமெடிகள் செய்திருந்தார்.சரத் , கலக்க போவது யாரு நிகழ்ச்சிக்கு முன்பாகவே விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான வெற்றித் தொடரான கனா காணும் காலங்கள் தொடரில் நடித்தவர் என்பதும் பலரும் அறிந்திராத ஒரு விஷயம்.

- Advertisement -

அதன்பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தான் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தை வைத்து இவர் சிபிராஜ் நடிப்பில் வெளியான சத்யா படத்திலும் நடித்திருந்தார். சரத், கிருத்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவரின் மனைவி கிருத்திகாவும் மீடியாவுடன் தொடர்புடையவர் தான். முறைப்படி கிளாகிக்கல் நடனம் கற்றவர். இதுவரை பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். கூத்து பட்டறை நிகழ்ச்சியிலும் நடனமாடியுள்ளார். சரத் இதுவரை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் டைட்டில் கார்டை வென்றது இல்லை. ஆனால் முதன்முறையாக காதல் மனைவியின் துணையுடன் mr and mrs சின்னத்திரை சீசன் 3ல் டைட்டிலை அடித்ததுடன் சரத் – கிருத்திகா ஜோடி 5 லட்சம் ரொக்கத்தையும் சொந்தமாக்கி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சரத் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் இருந்த போதும் சரி குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்த போதும் சரி இவரை டாமினேட் செய்து இவரை பலர் உருவ கேலி செய்துள்னனர். சொல்லப்போனால் ஆரம்ப காலத்தில் இவர் மொட்டை ராஜேந்திரன் கெட்டப்பில் இருந்த போது பல உருவ கேலிக்கு உள்ளாகி இருக்கிறார்.

அதே போல குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கூட இவரை பலர் கேலி செய்து இருக்கின்றனர். ஆனால், அதை எல்லாம் அவர் கண்டுகொள்ளாமல் ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக்கொண்டார். மேலும், சமூக வலைதளத்தில் கூட சரத் – கிருத்திகா தம்பதியினர் பல உருவ கேலிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இப்படி பல்வேரு அவமானங்கள் கேலிக்கு மத்தியில் இவர்கள் இருவரும் சாதித்து காட்டியுள்ளனர்.

Advertisement