பிரபல நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மகள் ஐஸ்வர்யா பாஸ்கரின் வளைகாப்பு புகைப்படங்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும், சிறந்த குணசித்திர நடிகராகவும் இருந்து வருபவர் எம்.எஸ்.பாஸ்கர். இவர் டப்பிங் கலைஞரும் ஆவார். இவரது வாழ்க்கை ஒரு நாடக கலைஞர் ஆக தொடங்கியது. பின், 1978ல் 'திருமதி ஒரு வெகுமதி' என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் சினிமாவில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து 1990 களில் பல சிறிய படங்களில் நடித்தார். பின் 2004 ஆம் ஆண்டு வெளியான 'எங்கள் அண்ணா' படம் தான் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகர் ஆகவும் இருக்கிறார் எம்.எஸ். பாஸ்கர். சின்னத்திரையிலும் சின்ன பாப்பா பெரிய பாப்பா, செல்வி, அரசி போன்ற தொடர்களில் இவர் நடித்து இருக்கிறார். மேலும் நடிகர் எம்.எஸ். பாஸ்கருக்கு ஐஸ்வர்யா என்ற மகளும், ஆதித்யா என்ற மகனும் இருக்கின்றனர்.
எம்.எஸ்.பாஸ்கர் குடும்பம்:
இதில் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர், பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான '96' படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் சிறு வயது விஜய் சேதுபதியாக நடித்து அனைவரின் பாராட்டினையும் பெற்றிருந்தார் ஆதித்யா பாஸ்கர். இந்தப் படத்தில், விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிக்க அவரைப் போன்றே தோற்றமுடைய ஒரு நபரை இந்த படத்தின் இயக்குனர் தேடி வந்தாராம். அதன் பின்னர் நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யாவை பார்த்த இயக்குனர் பிரேம், ஆதித்யா தான் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று எண்ணினாராம். ஆதித்யா பாஸ்கரும் அந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
View this post on Instagram
எம்.எஸ்.பாஸ்கர் மகள்:
இவரது மகள் ஐஸ்வர்யா டப்பிங் கலைஞராக உள்ளார். பல திரைப்படங்களில் ஹீரோயின்களுக்கு டப்பிங் செய்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ரஷ்மிகா போன்ற பல முன்னணி ஹீரோயின்களுக்கு டப்பிங் செய்துள்ளார். இதனிடையே ஐஸ்வர்யா பாஸ்கருக்கு அகுள் என்பவருடன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13-ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. அதில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
ஐஸ்வர்யா பாஸ்கர் - அகுள் திருமணம்:
அதைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா பாஸ்கர்-அகுள் திருமணத்தை 2020 ஆம் ஆண்டே நடத்தி முடிக்க இருவீட்டாரும் முடிவு செய்திருந்தார்கள். ஆனால், கொரோனா பரவல் காரணமாக இவர்களது திருமணம் தள்ளிப்போனது. இப்படி ஒரு நிலையில் தான் இந்த தம்பதிருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதியரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, கவின், தேவதர்ஷினி, குட்டி பத்மினி, சந்தியா, சாந்தினி, இயக்குனர் எஸ்.கே.சந்திரசேகர், விக்ரமன், வி.சேகர், சித்ரா லக்ஷ்மணன், ஆர்.பாண்டியராஜ் என பலரும் கலந்துகொண்டு வாழ்த்தியிருந்தார்கள்.
View this post on Instagram
ஐஸ்வர்யா பாஸ்கரின் வளைகாப்பு:
தற்போது, நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கர் கர்ப்பமாக இருக்கிறார். நிறை மாத கர்ப்பமாக இருக்கும் இவருக்கு சமீபத்தில் பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு ஐஸ்வர்யா பாஸ்கர் -அகுள் தம்பதியரை வாழ்த்தியுள்ளார்கள். தனது வளைகாப்பு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஐஸ்வர்யா பாஸ்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.






