விருது விழாவில் ரஜினி படத்தை பற்றி உறுதி செய்த முருகதாஸ்..!இதான் கதையாம்..!

0
705
Rajini-16
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “பேட்ட” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து இயக்குனர் முருகதாஸுடன் இணைந்து படம் நடிக்கிறார் ரஜினி என்ற செய்தி உலாவி வந்தது.

-விளம்பரம்-

இந்த படம் இந்திய அளவில் உள்ள அரசியல் பிரச்சினையை மையப்படுத்தியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சில நாட்களுக்கு முன்னர் பேட்டி அளித்த முருகதாஸ் கண்டிப்பாக தனது அடுத்த படம் அரசியல் கதையாக இருக்காது என்று கூறியிருந்தார்.

- Advertisement -

சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட முருகதாஸ், ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதாகவும், அந்த படம் சர்கார் படம் மாதிரி அரசியல் சம்பந்தப்பட்ட படம் இருக்காது என்றார்.

மேலும் சூப்பர் ஸ்டார் படத்தில் இடம்பெறும் அம்சங்கள் அனைத்தும் இருக்கும் என்றும் முருகதாஸ் விளக்கினார்.
லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு ஜனவரியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

-விளம்பரம்-
Advertisement