சர்கார் படம் முடிந்தது..! ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படம் இந்த நடிகருடனா..? வெளியான தகவல்..!

0
289
Murugadoss

சர்க்கார் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அதன்பிறகு படம் தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கிறது இந்த படம் ஆரம்பித்த நாளில் இருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.

Sarkar

சர்க்கார் பட ரிலீஸ் பின்பே புதிய படத்தை ஆரம்பிப்பேன் என்று கூறிவந்த இயக்குனர் முருகதாஸ் தற்போது சர்க்கார் பட ரிலீஸ் பணிகளை செய்து வருகிறார். அதன்பிறகு, பிறகு அவர் இயக்க போகும் படத்தின் ஹீரோவாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் “பேட்ட” படத்தில் நடித்து வருகிறார். வரும் தீபாவளிக்குள் பேட்ட படம் இறுதி கட்டத்தை எட்டிவிடும் என்பதால் ரஜினிகாந்த் அடுத்து முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிப்பதை உறுதி செய்வார் என்றே தோன்றுகிறது.

Rajini

எந்திரன் 2 மற்றும் பேட்ட ஆகிய படங்களுக்கு பிறகு ரஜினி முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் மீண்டும் ரஜினி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருவது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.