எனக்கும் ரெண்டு பெண் பிள்ளைகள் இருக்காங்க, விவாகரத்து பின் முதன் முறையாக மனம் திறந்த இமான் – வீடியோ இதோ.

0
566
imman
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இசையமைப்பாளராக திகழ்பவர் டி இமான். இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் பாடகரும் ஆவார். விஜய் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற தமிழன் படத்தின் மூலம் தான் இமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனால், இதற்கு முன்பு இவர் 2000 ஆண்டு வெளிவந்த தில்ரூபா என்ற படத்திற்கு இசையமைத்திருக்கிறார். முதல் படத்திலேயே இவர் இசைத்த அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானது. ஆனால், படம் வெற்றி பெறாததால் இவருக்கான வாய்ப்பு குறைந்தது. அதற்கு பின் தான் இவர் விசில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் பரவலாக அறியப்பட்டார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-119.jpg

பின் அதனை தொடர்ந்து இமான் பல படங்களில் இசைத்திருக்கிறார். மேலும், இவர் மருது, கயல், ஜீவா, சிகரம்தொடு, கும்கி, மைனா என பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தல அஜித்தின் விசுவாசம் படத்தில் இவர் இசையமைப்பாளராக பணியாற்றினார். இவருடைய பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. அதுமட்டுமில்லாமல் இந்த பாடலுக்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.

- Advertisement -

இமான் – மோனிக் :

இசையமைப்பாளர் இமான், கடந்த 2008 ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை இமான் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு Veronica மற்றும் Blessica என்ற இரு மகள்கள் உள்ளார்கள்.கடந்த ஆகஸ்ட் மாதம் கூட தனது மகள் Blessicaவின் பிறந்தநாளின் போது தன் மகளின் புகைப்படம் ஒன்றை இமான் பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் இமான் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

This image has an empty alt attribute; its file name is 1-120.jpg

2020 ஆம் ஆண்டே விவாகரத்து :

அதுவும் விவகாரத்து நடந்து ஓராண்டிற்கு பின் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இது குறித்து இமான் கூறி இருப்பது, என்னுடைய நல விரும்பிகள் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் நான் ஒன்றை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வாழ்க்கை ஒன்றை பல்வேறு பாதைகளை கொண்டது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம் .நானும் எனது மனைவி மோனிகா ரிச்சர்ட் அவர்களும் சட்டபூர்வமாக கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம்.

-விளம்பரம்-

இமானின் உருக்கமான பதிவு :

நாங்கள் இருவரும் இனிமேல் கணவன் மனைவி அல்ல. இது குறித்து எனது நல விரும்பிகள் மற்றும் இசை ரசிகர்களிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால் எங்களது தனிப்பட்ட இந்த முடிவுக்கு மதிப்பளித்து எங்களது அடுத்தகட்ட வாழ்விற்கு செல்லும் மதிப்பளித்து ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று மிகவும் உருக்கத்துடன் பதிவிட்டு இருந்தார் இசையமைப்பாளர் இமான்.

விவகாரத்து குறித்து இமான் :

இப்படி ஒரு ஒரு நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இமான், விவாகரத்து மிகப்பெரிய விஷயம், எப்போது ஆண் மீதுதான் குற்றம் சொல்வார்கள். ஆனார் யார் மீது வேண்டுமானாலும் குற்றம் இருக்கும். நான் என் வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடக்க கூடாது என விரும்பினேன். ஆனால் நடந்துவிட்டது, எனது குழந்தைகளை என் மூச்சு இருக்கும் வரை விடமாட்டேன். எனது முன்னாள் மனைவி நிறைவான வாழ்க்கையை வாழவேண்டும், அவளுக்கு பிடித்த வாழ்க்கையை அவள் வாழட்டும் என கூறியுள்ளார்.

Advertisement