விஜய் ஆண்டனியை தொடர்ந்து கைதி பட இசையமைப்பாளர் சாம் சி.எஸ் வீட்டில் நேர்ந்த மரணம்

0
1857
- Advertisement -

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் வீட்டில் துக்க சம்பவம் நிகழ்ந்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக சாம் சி.எஸ் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் 2012-ஆம் ஆண்டு வெளி வந்த ‘அம்புலி’ படத்திற்கு வெங்கட் பிரபு ஷங்கர் – சாம்.சி.எஸ் – சதீஷ் – மெர்வின் சாம்.சி.எஸ் நான்கு பேர் இணைந்து இசையமைத்திருந்தனர்.

-விளம்பரம்-

இது தான் சாம்.சி.எஸ் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் தமிழ் திரைப்படமாம். இதனைத் தொடர்ந்து ‘கடலை, கடிகார மனிதர்கள், புரியாத புதிர்’ என அடுத்தடுத்து சில படங்களுக்கு இசையமைத்தார் சாம்.சி.எஸ். 2017-ஆம் ஆண்டு வெளி வந்த ‘விக்ரம் வேதா’ படத்திற்கும் சாம்.சி.எஸ் தான் இசையமைத்திருந்தார். இதில் பிரபல நடிகர்கள் மாதவன் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இணைந்து நடித்திருந்தனர்.

- Advertisement -

சாம் சி.எஸ் திரைப்பயணம்:

இப்படத்தினை இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி சேர்ந்து இயக்கியிருந்தனர். இப்படத்தில் சாம்.சி.எஸ்ஸின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரிதும் பேசப்பட்டது. அதன் பிறகு “தியா, இரவுக்கு ஆயிரம் கண்கள், MR. சந்திரமௌலி, லக்ஷ்மி, அடங்க மறு, வஞ்சகர் உலகம், நோட்டா, 100, அயோக்யா, K 13, கொரில்லா, தேவி 2, ஜடா” என பல பிரபல நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தார் சாம்.சி.எஸ்.

சாம் சி.எஸ் கைதி படம்:

மேலும், ‘ஜடா’ படத்துக்கு பிறகு சாம்.சி.எஸ் இசையமைத்த ‘கைதி’ திரைப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளி வந்தது. கார்த்தி கதையின் நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தினை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தில் சாம்.சி.எஸ் போட்டிருந்த பின்னணி இசை படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றிருந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு சாம்.சி.எஸ் இசை ஒரு காரணம் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

சாம் சி.எஸ் ஹீரோ அவதாரம்:

தற்போது பிரபல இசையமைப்பாளர்கள் தமிழ் திரையுலகில் ஹீரோ அவதாரம் எடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார், விஜய் ஆண்டனி மற்றும் ‘ஹிப் ஹாப் விஜய் ஆதி இவர்கள் மூவருமே இசையமைப்பாளர்களாக தங்களது பயணத்தை சினிமாவில் துவங்கினார்கள். இப்போது மூவருமே நடிகர்களாக கைவசம் நிறைய படங்கள் வைத்திருக்கின்றனர். அந்த வரிசையில் சாம் சி.எஸ் ஹீரோவாக இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு பல படங்களில் கமிட்டாகி இசை அமைத்து வருகிறார்.

சாம் சி.எஸ் தாய் மரணம்:

இந்த நிலையில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் வீட்டில் நடந்திருக்கும் துக்க சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சாம் சி.எஸ்யின் அம்மா தான் இறந்திருக்கிறார். இன்று அவர் உடல் நலக்குறைவால் இறந்திருக்கிறார். இறுதி சடங்கு அவரின் சொந்த ஊரான தேனி நாராயணத்தேவன் பட்டியில் நடைபெறுகிறது. மேலும், சாம் சி.எஸ் தாயாரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement