‘வாழை’ படத்தில் வருவது போல் நிஜத்தில் மூட்டை தூக்கி கஷ்டப்படும் சிறுவன்- உதவி செய்ய முன்வந்த இசையமைப்பாளர் தமன்

0
323
- Advertisement -

நீயா நானா சிறுவனுக்கு, இசையமைப்பாளர் தமன் உதவ முன்வந்திருக்கும் செய்தி தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதல் படமே இவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருந்தது. அதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ போன்ற எல்லா படங்களும் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

தற்போது, மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்திருக்கும் படம் ‘வாழை’. இந்த படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மயப்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். மாரி செல்வராஜ் இளம் வயதிலிருந்து சந்தித்த ஜாதி, மதம் பாகுபாடுகளை மையமாக வைத்து வாழை என்ற படத்தை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் நிறைய பேட்டிகளில் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

- Advertisement -

நீயா நானா நிகழ்ச்சி:

அந்த வகையில், மாரி செல்வராஜ் சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுக் கொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது ‘நீயா நானா’ நிகழ்ச்சி தான். நீயா நானா கோபிநாத் என்று சொன்னாலே போதும் சின்ன குழந்தைகள் கூட அடையாளம் சொல்லுவார்கள். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர் கோபிநாத். ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு அதை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் எதிர் எதிராக அமர வைத்து சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நிகழ்ச்சி தான் ‘நீயா நானா’. சமுதாயத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

மூட்டை தூக்கும் சிறுவன்:

எனவே, சமீபத்தில் ‘வாழை’ படம் வெளியாகி வாரி செல்வராஜ் சிறப்பு விருந்தினராக வந்ததால், படித்துக்கொண்டே வேலை செல்லும் மாணவர்கள் Vs மாணவர்களின் பெற்றோர்கள் நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருந்தார்கள். அதில் கோவில்பட்டியை சேர்ந்த ஒரு மாணவன், தான் பழக்கடையில் வேலை செய்வதால், மூட்டை தூக்கும் வேலைகள் செய்வேன் என்று கூறினார். தான் தூக்கம் மூட்டைகள் 10 கிலோவுக்கு மேல் இருக்கும். அதனால், அவருக்கு தோள்பட்டை வலி இருந்து கொண்டே இருக்கும் என்று கூறினார்.

-விளம்பரம்-

சிறுவனின் சோகம்:

மேலும், காலை 5.30 மணியிலிருந்து 10 மணி வரை வேலை செய்வதாகவும். அதற்குப் பிறகு, சில நேரங்களில் பஸ்ஸை விட்டு விட்டால் மூன்று கிலோ மீட்டர் பள்ளிக்கூடத்துக்கு நடந்து போவதாக கூறினார். அப்படி நடந்து போகும்போது, நல்லா படித்து நல்ல நிலைமைக்கு வந்து அப்பா அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டே போவேன் என்றார். அதனைத் தொடர்ந்து பேசிய சிறுவனின் தாய், முதலில் நானும் வேலைக்கு போயிட்டு இருந்தேன், இப்போ எலும்பு தேய்மான பிரச்சினைகள் இருப்பதால் போக முடியவில்லை என்று கூறினார்.

சிறுவனுக்கு உதவ முன்வந்த தமன்:

தற்போது இந்த சிறுவனின் வீடியோ வைரலான நிலையில் பிரபல இசை அமைப்பாளர் தமன், இந்த சிறுவனுக்கு ஒரு இருசக்கர வாகனத்தை உதவியாக கொடுக்க விரும்புகிறேன். அது அந்த சிறுவன் வேலையை முடிச்சிட்டு சீக்கிரம் அவங்க அம்மாவை போய் பார்க்க உதவும். அதனால் அந்த பையனின் விவரங்களை எனக்கு கிடைக்குமாறு செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார். எனவே கஷ்டத்தில் இருக்கும் சிறுவனுக்கு உதவ முன்வந்த இசையமைப்பாளர் தமனை அனைவரும் பாராட்டி பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement