புகைப்படத்தில் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா ? அப்போவே இவர் இப்படியா ? இன்னிக்கி இவர் ரேஞ்சே வேற.

0
939
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான இசையமைப்பாளராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தமன். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி என பிற மொழித் திரைப்படங்களுக்கும் இசை அமைத்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். இந்நிலையில் இவரின் திரை பயணத்தை பற்றி பலரும் அறியாத சில விஷயங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

-விளம்பரம்-
Thaman

தமனின் இயற்பெயர் கண்டசாலா சாய் ஸ்ரீனிவாஸ். இவருடைய தந்தை கண்டசாலா சிவகுமார். இவர் புகழ்பெற்ற ட்ரம்மர். இவர் தெலுங்கு, கன்னட படங்களில் கொடிகட்டிப் பறந்த இசையமைப்பாளர். கே சக்கரவர்த்தியிடம் 700 படங்களுக்கு மேல் பணிபுரிந்துள்ளார். மேலும், தமனின் தாத்தா கண்டசாலா பாலராமையா தெலுங்கின் குறிப்பிடத்தகுந்த இயக்குனர். இவர் சில படங்களை தயாரித்திருக்கிறார். அதோடு இவர் சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.

- Advertisement -

தமனின் குடும்பம்:

அதுமட்டும் இல்லாமல் நடிகர் நாகார்ஜுனாவை சினிமாவில் அறிமுகப்படுத்தியவரும் இவரே தான். தமனின் அம்மா சாவத்திரி. இவர் பின்னணி பாடகி ஆவார். இப்படி ஒட்டுமொத்த குடும்பமும் சினிமா, இசையில் தொடர்புடையதாக இருந்ததால் சினிமாவிலும் இசையிலும் தமனுக்கு சின்ன வயதிலேயே ஆர்வம் வந்தது. பின் தன் அப்பாவிடமிருந்து ட்ரம்ஸ் மீதான விருப்பத்தை தெரிவித்து அதில் கவனம் செலுத்த தொடங்கினார். அதன் பின் 2003 இல் தன்னுடைய இருபது வயதில் சங்கர் படத்தில் நடிகராக அறிமுகமானார் தமன்.

தமனின் இசை பயணம்:

இந்த படத்தில் வரும் ஐந்து இளைஞர்களில் ஒருவராக, இசைக்கருவிகளை வாசிப்பவராக தமன் நடித்திருந்தார். இதன் மூலம் இவருடைய இசை பயணம் தொடங்கியது. மேலும், 2009ஆம் ஆண்டு இவர் இசை அமைத்த மல்லி மல்லி தெலுங்கு படம் வெளியானது. அதே வருடம் தமிழில் சிந்தனை செய் என்ற படத்திற்கும் தமன் இசையமைத்து இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல தமிழ் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவருடைய இசையில் வெளிவந்த பல பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

தமன் இசை அமைக்கும் படங்கள்:

இதனால் இவர் குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றார். சமீபத்தில் தமன் இசையில் வெளிவந்த ஆல வைகுந்தபுரமுலு, வக்கீல் சாப், அகண்டா, பீம்ல நாயக் போன்ற படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் கொடுத்தது. தற்போது மகேஷ் பாபு நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் சர்க்காரு வாரி பாட்டா என்ற படத்துக்கு தமன் இசையமைத்திருக்கிறார். அதேபோல் சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படம், சிரஞ்சீவியின் காட்பாதர், சிவகார்த்திகேயன் புதிய படம், தளபதி விஜய்யின் 66வது படம் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தமன் இசையமைத்து வருகிறார்.

இசையில் சாதனை செய்யும் தமன்:

ட்ரம்மராக இருந்து உதவி இசை அமைப்பாளராக உயர்ந்து பின் நடிகராக அறிமுகமாகி தற்போது இந்திய அளவில் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் தமன். மேலும், சமீப காலமாக தமன் நடிப்பு உட்பட அனைத்தையும் விட்டுவிட்டு இசையில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது பின்னணி இசை, பாடல் என அனைத்திலுமே தமன் சாதனை படைத்து வருகிறார். இதனால் தான் இவருக்கு சினிமா உலகில் முன்னணி நடிகர்களின் படங்களில் வாய்ப்பு தேடி வருகிறது. அதுமட்டுமில்லாமல் தற்போது தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக தமன் இருக்கிறார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Advertisement