இந்தியாவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனாவின் தாக்கத்தால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தை விட வட மாநிலங்களில் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து தான் வருகிறது. இதனால் தமிழ் நாடு உட்பட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்று கிழமை முழு நேர ஊரடங்கும் அமுலுக்கு வந்துள்ளது. தமிழ் சினிமாவை போல பாலிவுட் சினிமா வட்டாரங்களில் பல்வேறு பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனா பரவலை தடுக்கவும், அது குறித்து விழிப்புணர்வூ ஏற்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

என்னதான் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும், இந்த கொடிய வைரஸின் வீரியம் மட்டும் குறையவில்லை. கொரோனாவால் நடுத்தட்டு மக்களை விட அன்றாட வாழ்கைக்கே கஷ்டப்பட்டு வரும் கீழ் தட்டு மக்கள் தான் அதிகம் கஷ்டப்பட்டு வருகின்றனர். அதிலும் வீடில்லாமல் பிளாட் பாரத்தில் தங்கும் மக்களின் நிலை மிகவும் பரிதாபமான ஒன்று தான்.

இதையும் பாருங்க : பக்கா ஆச்சாரமான குடும்பம் போல – ஷிவாங்கியன் இளம் வயது குடும்ப புகைப்படம் இதோ.

Advertisement

அவ்வாறு கஷ்டப்படுபவர்களுக்கு பல்வேறு நல் உள்ளங்கள் உதவி செய்து தான் வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சமூக வலைத்தளத்தில் வைரலாக வீடியோ ஒன்றை பார்த்து ‘முதியோர் இல்லம்’ கட்ட முடிவு செய்துள்ளார் நடிகரும் இசையமைப்பாளருமான தமான். சமீபத்தில் சமூக வலைதளத்தில் வயதான பாட்டியின் வீடியோ ஒன்று வைரலானது. அதில் அந்த பாட்டிக்கு ஒருவர் தண்ணீர் மற்றும் உணவை கொடுக்கிறார்.

அதனை பெற்றுக்கொண்ட பின் அந்த பாட்டியிடம் வேறு எதாவது வேண்டுமா என்று அந்த நபர் கேட்க, தன் சுருக்குப் பையை திருந்த ‘இந்த ரூவாய வச்சிக்க ஐயா’ என்று அந்த பாட்டி சொல்கிறார். இந்த வீடியோவை பார்த்த தமான், என் இதயம் இரண்டு துண்டாக உடைந்துவிட்டது. ஒரு முதியோர் இல்லம் கட்ட வேண்டும் என்ற ஒரு புதிய கனவு உருவாகியுள்ளது. அதை கட்டி முடிக்க கடவுள் எனக்கு சக்தியை கொடுப்பார் என்று நம்புகிறேன். இதை நான் கண்ணீருடன் பதிவிடுகிறேன். உணவை வீணாக்காதீர்கள். தேவையானவர்களுக்கு அதை கொடுங்கள். மனிதனாய் இருபோம் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement
Advertisement