தமிழ் சினிமா உலகில் 80, 90 காலகட்டங்களில் வெளிவந்த ஒரு சில படங்கள் உணர்வுப்பூர்வமாக மக்கள் மனதை விட்டு நீங்காமல் அப்படியே இருக்கிறது. அந்த படங்களில் நடித்த சில நடிகர்கள் இன்னும் மக்கள் மனதில் நீங்காமல் அதே அந்தஸ்தைப் பெற்று உள்ளார்கள். அப்படி மக்கள் மத்தியில் பிரபலமாகி இன்று வரை நீங்காத இடம் பிடித்திருக்க படங்களுள் ஒன்று தான் முதல் மரியாதை. இயக்கத்தில் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘முதல் மரியாதை’. இந்த படத்தை பாரதிராஜா அவர்கள் தயாரித்திருந்தார்.

இந்த படத்தில் சிவாஜி கணேசன், ராதா, சத்யராஜ், வடிவுகரசி, தீபன், ரஞ்சினி, ஜனகராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க கிராமப்புற பின்னணியை மையமாக கொண்ட கதை. இளையராஜாவின் இசையும், வைரமுத்து அவர்களின் பாடல் வரிகளும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைய செய்தது. இந்த படம் நடிகர் திலகத்தின் கடைசி வெற்றி விழா படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் தீபன் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் தனக்கு திருமணமானதை சொன்ன ரக்ஷன் – மனைவியோடு அவரே வெளியிட்ட புகைப்படம்.

Advertisement

தீபன் வேறு யாரும் இல்லை மறைந்த முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்.ஜி.ஆரின் மருமகன். அதாவது ஜானகி எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன். இந்த நிலையில் 36 ஆண்டுகளுக்கு பின் தீபன் நேற்று வெளியான கேர் ஆப் காதல் படத்தில் நாயகனாக நடித்துளார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தீபன் கூறியதாவது,

முதல் மரியாதைக்கு பின் நான் நடித்த படங்கள் எம்.ஜி.ஆருக்கே பிடிக்கவில்லை. அவர் தயாரிப்பில் நடிக்க வைப்பதாக சொன்னார். ஆனால் அதன் பின்னர் அவர் உடல்நலம் குன்றிவிட்டது. எம்.ஜி.ஆர் அனுமதியுடன் தான் நடிக்க வந்தேன். மற்றபடி எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. இந்த படத்துக்கு கிடைத்த பாராட்டுகள் உற்சாகம் அளிக்கிறது. தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement