குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் தனக்கு திருமணமானதை சொன்ன ரக்ஷன் – மனைவியோடு அவரே வெளியிட்ட புகைப்படம்.

0
2269
raksha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பெண் தொகுப்பாளினிக்கு இணையாக ஆண் தொகுப்பளர்களும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் தற்போதைய விஜய் டிவி தொகுப்பாளராக ரக்ஷனும் ஒருவர். தொகுப்பாளரும் நடிகருமான ரக்ஷன் முதலில் ராஜ் டிவி, கலைஞர் டிவியில் தொகுப்பாளராக இருந்தார். ஆனால், அவருக்கென ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது விஜய் டிவி தான். விஜய் டிவியில் இவர் கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக உள்ளார். விஜய் டிவி மூலம் தான் ரக்ஷன் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், துல்கர் சல்மான் நடித்து உள்ள ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற படத்தின் மூலமாக ரக்ஷன் வெள்ளித்திரையில் நடிகராக மாறி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் கவனிக்கப்பட்டது. இந்த படத்திற்கு பின்னர் ரக்ஷனுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வந்த வண்ணம் இருக்கிறது. இது குறித்து அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவும் இருக்கிறது. ரக்ஷன் தற்போது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். இன்று (பிப்ரவரி 13 ) நடைபெற்ற நிகழ்ச்சியில் காதலர் தின சிறப்பு எபிசோடாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களும் கோமாளிகளும் தங்களது வாழ்வில் நடந்த காதல் பற்றி கூறி வந்தனர்.

- Advertisement -

அப்போது அஸ்வின், மற்றவர்களை எல்லாம் கேக்குற உன் காதல் கதையை சொல்லேன் என்று கேட்டதற்கு 8வதுல ஆரம்பிச்சி இப்போது வரை நன்றாக போய் கொண்டு இருக்கிறது என்று சொன்னார். பின்னர் கல்யாணம் லவ் மேரேஜ் தான் என்று கூறினார். ரக்ஷன் தனக்கு திருமணம் ஆகிவிட்டதாக சொன்னதை பார்த்து பலரும் காமெடிக்காக தான் என்று தான் பலரும் நினைத்தார்கள். இப்படி ஒரு நிலையில் ரக்ஷன் முதன் முறையாக தனது மனைவியின் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா இறந்த பின்னர் ரக்‌ஷன்,தொகுப்பாளர் நடிகருமான ரக்‌ஷனுடன் ஷடேட்டிங் சென்றதாகவும் அப்போது ரக்‌ஷன் சித்ரா உடன் இருக்கும் நெருக்கமான வீடியோவை எடுத்து சித்ராவை மிரட்டியதாகவும் சித்ராவின் நெருங்கிய தோழி ஒருவர் கூறியதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு பதில் அளித்த ரக்ஷன், நானும் சித்ராவும் டேட்டிங் சென்றதாகவும் அவரை நான் வீடியோ எடுத்து மிரட்டியதாக வந்த செய்தி பொய்யானது. நானே சொற்ப சம்பளம் வாங்கும் ஒரு கூலி தொழிலாளியாக வாழ்க்கை நடத்தி வருகிறேன். எனக்கு சித்ரா ஒரு நல்ல தோழி. நான் சித்ராவின் மரணத்திற்கு கூட சென்று இருந்தேன். அங்கே கூட எல்லாரும் ஹேமந்த்தை குறை சொல்லி எல்லோரும் பேசிக்கொண்டு இருந்தோம் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement