முதல்வன் 2 படத்தில் இவர் ஹீரோ என்றால் நன்றாக இருக்கும்..!இயக்குனர் ஷங்கர் பேட்டி..!

0
524

இன்னும் சில நாட்களில் சூப்பர்ஸ்டார் ரஜினியுன் 2.0 படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தினை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். 2010ல் வெளிவந்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் என முதலில் கூறப்பட்டது.

Shankarvijay

எந்திரன் படத்திற்கு முன்பு சங்கரின் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடித்ததில்லை. ஆனால், 1999ஆம் ஆண்டு வெளிவந்து செம்ம ஹிட் முதல்வன் படத்தில் நடிக்க முதலில் சூப்பர்ஸ்டார் ரஜினியிடம்தான் பேசப்பட்டது. ஆனால், அப்போதைய அரசியல் காரணங்களால் ரஜினி அதில் நடிக்க மறுத்துவிட்டார்.

அதன்பின்னர், விஜய்க்கு வந்தது ஆனால், விஜயும் பிஸியாக இருந்ததால் அர்ஜுனுக்கு சென்றது.இந்நிலையில் தற்போது எந்திரன் 2 படத்தை தொடர்ந்து கமலை வைத்து ‘இந்தியன் 2’ படத்தை எடுக்கவுள்ளார் ஷங்கர்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷங்கரிடம் இந்தியன் 2 போலவே ‘முதல்வன் 2’ எப்போது என்று கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த ஷங்கர், அதற்க்கு தகுந்த போல் ஒரு கதை உருவாக வேண்டும், அந்த கதை யாரை தேடுகிறதோ அவருடன் பணியாற்றுவேன், அது விஜய் என்றால் ஓகே தான்’ என்று கூறியுள்ளார்.