விவேக்குடன் நடித்துவிட்டால் வடிவேலு இதான் செய்வார் – வடிவேலுவின் மோசமான மறுபக்கத்தை கூறிய காமெடி நடிகர்.

0
513
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் முத்துக்காளை. இவர் ராஜபாளையத்தை சேர்ந்தவர். இவர் 8ம் வகுப்பு வரையில் படித்திருந்தார். பின் சினிமாவில் ஸ்டன்ட் துறையில் சேர வேண்டும் என்ற ஆசையில் படிப்பை நிறுத்திவிட்டு கராத்தே கற்றுக்கொண்டு பிளாக் பெல்ட் வாங்கினார். பின்னர் சினிமா துறைக்குள் கஷ்டப்பட்டு நுழைந்தார். இயக்குனர் எல்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த பொன்மனம் என்ற படத்தின் மூலம் தான் முத்துக்காளை நகைச்சுவை நடிகராக சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் பேய் இருக்க பயமேன் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதோடு 8ம் வகுப்பு மட்டுமே படித்த முத்துக்காளை படிக்க முடியாததை எண்ணி கண்கலங்கி கஷ்டப்பட்டு பி.ஏ படித்து முடித்து எம் பி தமிழ் மேற்பட்டப் படிப்பை படித்து முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

முத்துக்காளை அளித்த பேட்டி:

இது ஒருபக்கம் இருக்க, இவர் சில வருடங்களுக்கு முன் தொடர்ந்து குடியில் மூழ்கி இருந்ததால் முன்னணி காமெடி நடிகர் என்கிற இடத்தை பிடிக்காமலே வந்த வேகத்தில் காணாமல் போய்விட்டார். இந்நிலையில் சமீபத்தில் இவர் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, எனக்கு சின்ன வயதிலிருந்தே பைட் மாஸ்டர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால், எதிர்பாராமல் நடிகராக வாய்ப்பு வந்தது. சரி வந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தான் நான் நகைச்சுவை நடிகர் ஆனேன்.

முத்துக்காளை குடிப்பழக்கம்:

மேலும், சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது எனக்கு குடிப்பழக்கம் வந்துவிட்டது. அதனால் கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி வரை நான் ரொம்ப குடித்துக் கொண்டிருந்தேன். வடிவேல் அண்ணன் கூட இதைப் பற்றி கிண்டலாக ‘குடிச்சு குடிச்சு நீ சாகப் போகிறாய்’ என்று சொல்லுவார். அந்த அளவுக்கு நான் குடித்துக்கொண்டிருந்தேன். பின் ஒரு சூழலால் என் குடியை விட்டு என் குடும்பத்தோடு இப்போது நான் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அது மட்டுமில்லாமல் குடியினால் நான் பல இடங்களில் அவமானங்களையும், பட வாய்ப்புகளையும் தவற விட்டிருக்கிறேன்.

-விளம்பரம்-

முத்துக்காளை திருமண வரவேற்பு விழா:

எனக்கு 2005ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. என்னுடைய திருமணத்திற்கு பெரிய நடிகர்கள் எல்லோரும் வந்து இருந்தார்கள். அப்போது என்னோட ரிசப்ஷனில் நாங்கள் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் மட்டும் என்னுடைய வாழ்க்கையில் ரொம்பவே ஸ்பெஷல். ஏன்னா, வடிவேல்- விவேக் சாரும் சேர்ந்து ஒன்றாக ஒரே நிகழ்வுக்கு எப்போதும் போக மாட்டார்கள். அப்படி போனாலும் தனித்தனியாக போயிட்டு வருவார்கள். ஆனால், என்னுடைய திருமண வரவேற்பு விழாவில் வடிவேல்- விவேக் சாரும் சேர்ந்து எங்கள் கூட போட்டோ எடுத்துக்கொண்டார்கள்.

வடிவேல்-விவேக் குறித்து முத்துக்காளை :

நகைச்சுவை நடிகர்களில் வடிவேலுவை விட விவேக் தன் உடன் நடிக்கும் கலைஞர்களுக்கு அதிகமாக உதவி செய்வார். திரைக் கலைஞர்களின் பிள்ளைகளின் படிப்புக்கு கூட உதவுவார். அவர் புத்தகங்கள் அதிகம் படிப்பதால் காமெடி ஐடியாக்கள் நிறைய வரும். வடிவேலுக்கு அப்படி இல்லை.மேலும், விவேக்குடன் சேர்ந்து படம் நடித்துவிட்டால், மீண்டும் தன்னுடன் அந்த கலைஞர்களை வடிவேலு சேர்த்துக் கொள்ள மாட்டார். தன் உடன் பயணிப்பவர்களை வடிவேலு வளரவும் விடமாட்டார் என்று கூறியுள்ளார் முத்துக்காளை.

Advertisement