மைடியர் பூதம் சீரியலில் நடித்த குட்டி பையனா இது ? நீங்களே பாருங்க - புகைப்படம் உள்ளே

By Ajju · 23/2/2018
2000த்தின் துவக்கத்தில் ஒளிபரப்பாகிய சிறுவர்களுக்கு பிடித்தமான சீரியல்களில் ஒரு மைடியர் பூதம். இந்த சீரியல் குழந்தைகள் மத்தியில் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட ஒரு சிரியலாக அமைந்தது. சிறியவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் ரசித்தனர். பள்ளி முடிந்தவடன் எப்படியாவது வேகமாக வீட்டிற்கு ஓடிவந்து மைடியர் பூதம் சீரியலை பார்த்து விடவேண்டும் என நம்மில் பலர் ஓடி வந்திருப்போம். குழந்தைகளுக்கு பிடித்தமான சொல்வதை செய்யும் பூதம் ஒன்று செய்யும் சுட்டித்தனம் தான் இந்த சீரியலின் கதை. கிட்டத்தட்ட 900 எபிஸோடுக்கும் மேலாக ஓடி சாதனை படைத்துள்ளது இந்த சீரியல். அவர்களில் ஒருவர் அபிலாஷ். இவர் ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவர் மைடியர் பூதம் சீரியலில் நடிக்கும் முன்னர் பல தெலுங்கு சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது வளர்ந்து பெரிய ஆளாக மாறிவிட்ட அபிலாஷ் சில தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். 1.தோனி கபடி குழு 2.நாகேஷ் திரையரங்கம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அபிலாஷ். இதற்கு முன்னர், மைடியர் பூதம் சீரியலை தவிர, 1.வீட்டுக்கு வீடு லூட்டி 2.விக்ரமாதித்யன் 3.மகள் 4.கோகுலத்தில் சீதை 5.அபிராமி 6.கொடி முல்லை ஆகிய தமிழ் சீரியல்களில் நடித்தார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full