விபத்தில் சிக்கி நினைவை இழந்த என் மகனுக்கு நினைவில் இருப்பது விஜய் மட்டும் தான் - நாசர் சொன்ன நெகிழ்ச்சியான சம்பவம்.

By Rajkumar · 17/7/2021

தன்னுடைய மகன் எந்த அளவிற்கு விஜய்யின் ரசிகர் என்று நாசர் கூறியுள்ளது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் காலகட்டம் துவங்கி தற்போது வரை பல்வேரு படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகர்கராகவும் நடித்தவர் நடிகர் நாசர். நாசரின் சினிமா வாழ்க்கை தற்போது வரை பிரகாசமாக இருந்தாலும் அவரின் குடும்ப வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளை சந்தித்து இருக்கிறார். இவருக்கு பைசல், லுத்புதீன், மெஹ்திஹாசன் என்ற மூன்று மகன்களும் உள்ளனர். இவரது மூத்த மகனான பைசல் கடந்த 2014 ஆம் ஆண்டு கோரமான விபத்தில் சிக்கினார்.

https://twitter.com/KarthikMdr3/status/1416037295891746820

அந்த விபத்தில் பைசலுடன் பயணித்த இரண்டு நபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, பைசல் மட்டும் மண்டையில் கடுமையாக காயத்துடன் மருத்துவமணையில் அனுமதிக்கபட்டார். நீண்ட நீள சிகிச்சைக்கு பின்னர் உயிர்பிழைத்த பைசல் தற்போதும் சிகிச்சை பெற்று வருகிறார்.நாசரின் மகன் பைசல் தீவிரமான விஜய் ரசிகரும் கூட, தனது காரின் பின்பகுதியில் கூட விஜய் நடித்த மெர்சல் பெயரைத்தான் ஸ்டிக்கராக ஒட்டியுள்ளார்.

இதையும் பாருங்க : பாலிடிக்ஸ், திடீர் நிறுத்தம் - ஒரு வழியாக ஆயுத எழுத்துக்கு பின் அடுத்த சீரியலில் கமிட் ஆன பிரபலம்.

பைசல் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த போது நடிகர் விஜய் அவ்வப்போது நாசர் வீட்டிற்கே சென்று நேரில் சந்தித்து வருவதும் வழக்கம். அதே போல கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கூட பைசல் பிறந்தநாளின் போது அவரது வீட்டிற்கே சென்று கேக் ஒட்டி கொண்டாடி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் நாசர் தனது மகன் எந்த அளவிற்கு விஜய் ரசிகர் என்பதை கூறியுள்ளார்.

அந்த பேட்டியில் பேசியுள்ள நாசர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. என்னுடைய மூத்த பையன் விஜய்யின் மிகப்பெரிய ரசிகர் அவனுக்கு ஒரு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு இருந்தது அவர் பிழைத்ததே பெரிய விஷயம் அவருடைய நினைவு முழுவதுமாக போய்விட்டது ஆனால் அவனுக்கு ஞாபகம் இருக்கும் ஒரே ஒரு விஷயம் விஜய் தான் ஆரம்பத்தில் நாங்கள் அவனுடைய நண்பர் விஜய் ஆனந்த் என்றுதான் பின்னர்தான் தெரிந்தது அது விஜய் என்று. இன்றும் அவன் விஜய் பாடல்களைத்தான் பார்த்துக் கொண்டிருப்பான். இந்த விஷயம் விஜய் காதுக்கு போய் அவனுடைய பிறந்தநாளுக்கு நேரில் வந்து வாழ்த்தினார் என்று கூறியுள்ளார் நாசர்.

behindtalkies AMP · Quick view
View full