மைனா இப்படி பிறந்தநாள் கொண்டாடுவது இதான் முதல் முறை – யோகேஷ் கொடுத்த சர்ப்ரைஸ்

0
2032
Mynanandhini
- Advertisement -

மைனா நந்தினியை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தன்னுடைய நகைச்சுவை பேச்சாலும், எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நந்தினி. இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் சின்னத்திரையின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். பின் சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சூரிக்கு மனைவியாக நடித்திருந்தார். அதன் பிறகு இவர் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். இடையில் நடிகை மைனா சீரியல் நடிகரும், நடன இயக்குனராக யோகேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது.

- Advertisement -

ஆனால், மைனாவின் முதல் கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு தன்னுடைய விடாமுயற்சியினால் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல் என்று மைனா நந்தினி பிசியாக கலக்கிக் கொண்டு வருகிறார். சமீபத்தில் வெளியான சுந்தர் சியின் அரண்மனை 3 படத்தில் மறைந்த நடிகர் விவேக் ஜோடியாக மைனா நடித்திருந்தார். இந்த படத்தில் அவருடைய நகைச்சுவை ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்திருந்தது.

அதேபோல் இவர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி இருந்த விக்ரம் படத்தில் மைனா நந்தினி விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகிறது. இதனை தொடர்ந்து இவர் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். மைனா நந்தினியும் அவரது கணவர் இருவரும் சேர்ந்து மைனா விங்ஸ் என்ற பெயரில் யூடியூபில் தனியாக சேனல் ஒன்று நடத்தி வருகிறார்.இதில் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் செய்யும் காமெடி வீடியோக்களை அதிகம் பதிவேற்றி வருகிறார். மேலும், இவர் பதிவிடும் வீடியோ எல்லாம் யூட்டூபில் படு வைரலாகி வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார்.அதிலும் தங்கள் யூடுயூப் சேனல் சப்ஸ்கிரைபர்களை அழைத்து பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். மேலும், மைனா இப்படி பிறந்தநாள் கொண்டாடியது இல்லை இப்படி குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடுவது இதான் முதல் முறை என்று கூறியுள்ளார் யோகேஷ்.

Advertisement