அடடே, மைனா நந்தினி மகன் என்னம்மா பாடுறாரு, பெரிய பாடகராக வருவாரு போல – வைரலாகும் வீடியோ.

0
879
myna
- Advertisement -

மைனா நந்தினியின் மகன் பாடி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மைனா நந்தினியை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தன்னுடைய நகைச்சுவை பேச்சாலும், எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நந்தினி. இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் சின்னத்திரையின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். பின் சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சூரிக்கு மனைவியாக நடித்திருந்தார். அதன் பிறகு இவர் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். இடையில் நடிகை மைனா சீரியல் நடிகரும், நடன இயக்குனராக யோகேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது.

இதையும் பாருங்க : மாமனிதனை உங்களால் கொள்ள முடியாது – ப்ளூ சட்டை விமர்சனத்திற்கு சீனுராமசாமி போட்ட பதிவு. கேலியாக பதில் கூறிய ப்ளூ சட்டை.

- Advertisement -

மைனா நந்தியின் திரைப்பயணம்:

ஆனால், மைனாவின் முதல் கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு தன்னுடைய விடாமுயற்சியினால் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல் என்று மைனா நந்தினி பிசியாக கலக்கிக் கொண்டு வருகிறார். சமீபத்தில் வெளியான சுந்தர் சியின் அரண்மனை 3 படத்தில் மறைந்த நடிகர் விவேக் ஜோடியாக மைனா நடித்திருந்தார். இந்த படத்தில் அவருடைய நகைச்சுவை ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்திருந்தது. அதேபோல் இவர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

விக்ரம் படம்:

சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி இருந்த விக்ரம் படத்தில் மைனா நந்தினி விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகிறது. இதனை தொடர்ந்து இவர் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். மைனா நந்தினியும் அவரது கணவர் இருவரும் சேர்ந்து மைனா விங்ஸ் என்ற பெயரில் யூடியூபில் தனியாக சேனல் ஒன்று நடத்தி வருகிறார்.

-விளம்பரம்-
myna

நந்தினி யூடியூப் சேனல்:

இதில் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் செய்யும் காமெடி வீடியோக்களை அதிகம் பதிவேற்றி வருகிறார். மேலும், இவர் பதிவிடும் வீடியோ எல்லாம் யூட்டூபில் படு வைரலாகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இவர்கள் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள். சமீபத்தில் மைனா மற்றும் யோகி இருவரும் துபாய் சென்று இருந்தார்கள். அங்கு அவர்கள் எடுத்த புகைப்படம், வீடியோக்களை dubai tour vlogs என்று பெயரில் வெளியிட்டு இருந்தார்கள். இந்நிலையில் மைனா நந்தினியின் மகன் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மைனா மகன் பாடிய வீடியோ:

இவருக்கு துருவன் என்ற அழகான மகன் இருக்கிறார். இவர் அடிக்கடி செய்யும் சேட்டைகளை எல்லாம் வீடியோவாக எடுத்து தன்னுடைய யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய மகன் மைக்கை பிடித்து பாடிய வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த வீடியோ தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனை பார்த்த பலரும் மைனா மகன் பெரிய பாடகராக வருவார் போல என்றெல்லாம் கமெண்டுகளை குவித்து வருகிறார்கள்.

Advertisement