சினிமாவில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து சினிமாவில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் நடிகர் விதார்த்திற்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு.

தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார் நடிகர் வித்தார்த். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ஆனால், அந்த படத்திற்கு பின்னர் இவர் ஹீரோவாக நடித்த எந்த படமும் சொல்லிக்கொள்ளும்படி ஓடவில்லை. மேலும், இவர் சினிமாவில் நேரடியாக ஹீரோவாக அறிமுகமாகவில்லை. ஆரம்பத்தில் இவர் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான்.

இதையும் பாருங்க : பிகில் பட வில்லன் மகள். படுத்தபடி படு கிளாமர் உடையில் கொடுத்த போஸ்.

Advertisement

இவர் திரையில் முதன் முதலில் தோன்றியது 2001-ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வெளி ‘மின்னலே’ படத்தில் தான். இந்த படத்தில் நடிகர் விதார்த் மிக சிறிய வேடத்தில் அறிமுகமாகியிருந்தார்.இதனைத் தொடர்ந்து சூர்யாவின் ‘மௌனம் பேசியதே’, சிபிராஜின் ‘ஸ்டுடண்ட் நம்பர் 1, லீ’, விஷாலின் ‘சண்டக்கோழி’, கரனின் ‘கொக்கி’, அஜித்தின் ‘திருப்பதி’, தனுஷின் ‘பரட்டை என்கிற அழகு சுந்தரம்’, அர்ஜுனின் ‘திருவண்ணாமலை’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மின்னலே படத்தில் வித்தார்த்

அவ்வளவு இவர் விஜய் படத்தில் கூட ஒரு சிறு கதாபாதிபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆம், 2008 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் விஜய்யின் ‘குருவி’ படத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நடித்துள்ளார் வித்தார்த். குருவி படத்தில் நடிகர் விஜய், தனது தந்தையான மணிவண்ணனை மீட் ஒரு கல் குவாரிக்கு செல்வார்.

Advertisement

அங்கே இருக்கும் சில இளைஞர்களின் ஒருவராக நடித்திருப்பார் வித்தார்த். இந்த படம் வெளியாகி 2 ஆண்டுகள் கழித்து, அதாவது 2010-ஆம் ஆண்டு வெளி வந்த ‘மைனா’ படத்தில் தான் இவர் ஹீரோவாக அறிமுகமானார். இதோ குருவி படத்தில் வித்தார்த் நடித்துள்ள அந்த காட்சியின் புகைப்படம்.

Advertisement
Advertisement