தமிழ் சினிமா உலகில் எப்போதும் வித்தியாசமான கதைக்களத்தை கொடுப்பதில் மிஷ்கின் கைதேர்ந்தவர். அதுவும் இவருடைய படங்கள் எல்லாம் திர்ல்லர், ஆக்ஷன் போன்ற பாணியில் தான் இருக்கும். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் உருவான சைக்கோ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யா மேனன், ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இசைஞானி இளைராஜா அவர்கள் படத்திற்கு இசை அமைத்து உள்ளார். இந்நிலையில் மிஸ்கின் அவர்கள் சமீபத்தில் நடந்த பேட்டியில் சைக்கோ படத்தின் பாடல் காட்சியை உருவாக்கும் போது இளையராஜாவுக்கும் இவருக்கு ஏற்பட்ட சண்டை விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் அவர் கூறியிருப்பது, சமீபத்தில் இளையராஜா அவர்கள் என்னை மூஞ்சில் முழிக்காத என்று திட்டி விட்டார். சைக்கோ படத்தில் வந்த உன்ன நெனச்சி என்ற பாடலின் போது தான் இந்த நிகழ்வு நடந்தது. இந்த பாடலுக்காக இளையராஜா நிறைய டியூன் போட்டு காண்பித்தார். அதெல்லாம் எனக்கு பிடிக்கவே இல்லை. பின் நாங்கள் பாடல் வரிகளை எழுதிக் கொண்டு போய் இளையராஜா அவர்களிடம் கொடுத்தோம். அதற்கு அவர் இது நல்லாவே இல்லை என்று தூக்கிப் போட்டு விட்டார். பின் மறுநாள் இளையராஜாவே பாடல் வரிகளை எழுதி வைத்திருந்தார். நான் அதை பார்த்துவிட்டு நல்ல இல்லை என்று சொல்லிவிட்டேன்.

Advertisement

உடனே அவரது தூக்கிப்போட்டு விட்டு நீங்களே பண்ணிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றார். பின் நாங்கள் அந்த பாடலை சித் ஸ்ரீராம் என்ற புது பையனை வைத்து எடுக்க முடிவு செய்தோம். ஆனால், அவரைப் பாட வைக்க கூடாது என்று இளையராஜா என்னிடம் சொன்னார். இதனால் ஒரு வாரம் எனக்கும், அவருக்கும் சண்டை நடந்து கொண்டே இருந்தது. பின் இளையராஜா அவர்கள் அந்த பையனை பாட வைத்தால் நான் வாய்ஸ் மிக்ஸ்ஸிங்க்கு வர மாட்டேன் என்று கூறினார். நானும் சரி பரவாயில்லை என்று சொல் விட்டு சித் ஸ்ரீராமை வைத்து உன்ன நெனச்சு என்ற பாடலை எடுத்தேன்.

வீடியோவில் 4 நிமிடத்திற்கு பின் பார்க்கவும்

அந்த பாடல் நாங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றியை கொடுத்தது என்று கூறினார். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. அன்றும் இன்றும் என்றும் இளையராஜாவின் இசைக்கு வசப்படாத இதயங்கள் உள்ளதா என்று கூறுமளவிற்கு புகழின் உச்சத்தில் உள்ளார். இவர் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த அன்னக்கிளி என்ற படத்தில் இசை அமைத்ததன் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். இவர் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் இசையமைத்து உள்ளார்.

Advertisement
Advertisement