‘நவர ராத்திரி’ ஸ்பெஷல் – வித விதமான அம்மன் கெட்டப்பில் அசத்திய NINI சீரியல் நடிகை. யார் தெரியுதா ?

0
2443
gayathri
- Advertisement -

அம்மன் அவதாரம் எடுத்துள்ள பிரபல சீரியல் நடிகையின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பெரும்பாலும் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் இடம் பிடித்து வருகிறார்கள். அதிலும் விஜய் டிவி சீரியல்கள் மட்டுமில்லாமல் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழில் பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை காயத்ரி யுவராஜ்.

-விளம்பரம்-

இவர் தன்னுடைய கணவர் யுவராஜின் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடியதன் மூலம் தான் விஜய் டிவிக்கு அறிமுகமானார். பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் நாயகியாக அறிமுகமானவர். இதனை தொடர்ந்து இவர் அரண்மனைக்கிளி என்ற சீரியலில் நடித்தார். இவர் அதிகம் வில்லி கதாபாத்திரத்தில் தான் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார் என்று சொல்லலாம்.

இதையும் பாருங்க : சமந்தாவை குறிப்பிட்டு அந்த டீவீட்டை செய்தேனா – ஏமாற்றுபவர்கள்’ ட்வீட் குறித்து சித்தார்த் அளித்த விளக்கம்.

- Advertisement -

மேலும், இவர் நடிப்பதோடு மட்டுமில்லாமல் நடன நிகழ்ச்சிகள் பலவற்றிலும் பங்கேற்று வருகிறார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தன் கணவருடன் இணைந்து பங்கேற்று வருகிறார். அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் பிரபலமான தொடர்களில் ஒன்றான நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் விஜய் டிவியில் மட்டுமில்லாமல் சன் டிவியில் மிகப்பிரபலமான சீரியலான சித்தி 2 தொடரிலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி படு பிஸியான காயத்ரி அவர்கள் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அதை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவார். இந்நிலையில் தற்போது இவர் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி வருகிறது.

-விளம்பரம்-

அது என்னவென்றால், நவராத்திரி பூஜையை முன்னிட்டு நடிகை காயத்ரி அவர்கள் அம்மன் அவதாரங்களில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்மன் அவதாரத்தில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் வியந்து ஆச்சிரியத்தில் உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இவரின் புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் அதிகமாக ஷேர் செய்தும் வருகிறார்கள்.

Advertisement