பிரபல தமிழ் நடிகையுடன் ரகசிய திருமணம் செய்து கொண்ட ‘நான் ஈ’ பட நடிகர்.!

0
1392
- Advertisement -

மீன் குழம்பும் மண்பானையும் படத்தில் நடித்திருப்பதுடன் பல்வேறு தெலுங்கு, கன்னட படங்களில் நடித்திருப்பவர் எஸ்தர். இவரும், ‘நான் ஈ’ படத்தில் ஹீரோ நானியுடன் இணைந்து நடித்த நோயலும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர்.

-விளம்பரம்-

தங்களது காதலை பொதுவெளியில் வெளிப்படுத்தாமல் ரகசியம் பாதுகாத்ததுடன் நண்பர்கள்போல் பழகி வந்தனர். இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து நேற்றுமுன்தினம் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

- Advertisement -

கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள சர்ச்சில் திடீர் திருமணம் செய்துகொண்டனர். திருமண விழாவுக்கு பிரபல நடிகர், நடிகைகள் யாரையும் அழைக்கவில்லை.ஒரு சில நண்பர்கள் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். நோயல், எஸ்தர் தங்களது ரகசிய திருமண படத்தை இணைய தள பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றனர்.

இதுபற்றி எஸ்தர்,’இனிமேல் நாங்கள் இருவர் அல்ல ஒன்றாகி ஒருவராகிவிட்டோம். இனி என்னுடைய இதயத்தை ஆளப்போகும் மன்னன் நோயல்தான்’  என குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement