இந்த நாதஸ்வரம் சீரியல் நடிகைய ஞாபகம் இருக்கா ? நாளைக்கு திருமணம். மாப்பிள்ளை இவர் தான்.

By Rajkumar · 1/3/2021

சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை கீதாஞ்சலி. இவர் நாதஸ்வரம் என்ற சீரியலில் ஹீரோவும், இயக்குனருமான திருமுருகனின் காதலி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த முதல் சிரியலிலேயே இவருக்கு மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. நடிகை கீதாஞ்சலி காரைக்குடியை பூர்வீகமாக கொண்டவர். நாதஸ்வரம் சீரியல் ஷூட்டிங் காரைக்குடியைச் சுற்றி உள்ள இடங்களில் நடந்ததால் வீட்டிலிருந்தே வந்து சூட்டிங்கில் கலந்து கொண்டார் கீதாஞ்சலி. நாதஸ்வரம் சீரியலை தொடர்ந்து இவருக்கு அடுத்து அடுத்து சீரியலில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன.

இதனால் இவர் சென்னையிலேயே தன் அம்மாவை அழைத்துக் கொண்டு வந்து தங்கினார். பின் கீதாஞ்சலி அவர்கள் சினிமாவில் கூட சில படங்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு இவர் நடித்து வந்த "வாணி ராணி" சீரியல் வெற்றிகரமாக முடிவு அடைந்தது. உடனடியாக இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான "நிறம் மாறாத பூக்கள்" என்ற சீரியலில் கமிட் ஆனார். அதே சமயத்தில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலிலும் கீதாஞ்சலி கமிட்டானார்.

இதையும் பாருங்க : டிவில 'மை நேம் இஸ் பில்லா' பாட்டு போட்டாலே இந்த ட்ரெஸ்ஸ நான் போட்டுப்பேன் - கார்த்தி பகிர்ந்து சிறு வயது புகைப்படம்.

இந்த இரண்டு சீரியல்களின் சூட்டிங் நாட்கள் ஒரே நேரங்களில் நடைபெற்றதால் இரண்டு சீரியலிலும் நடிக்க சில பிரச்சனைகள் ஏற்பட்டது.மேலும், தொடர்ந்து இந்த 2 சீரியல்களில் நடிக்க பல பிரச்சனைகள் ஏற்பட்டதால் நடிகை கீதாஞ்சலி அவர்கள் ராஜா-ராணி-சீரியல் இருந்து விலகி விட்டார். பின் நிறம் மாறாத பூக்கள் என்ற தொடரில் மட்டும் நடித்து கொண்டு வந்தார். அதோடு சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த நிறம் மாறாத பூக்கள் தொடரும் முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு கீதாஞ்சலி அவர்களுக்கு அவ்வளவாக சினிமாக்களும், சீரியல் வாய்ப்புகள் அமையவில்லை என்ற உடன் சென்னையிலிருந்து வீட்டை காலி செய்து கொண்டு தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று விட்டார்.இவருக்கும் திருவாரூரைச் சேர்ந்த கீர்த்தி ராஜுக்கும் நாளை மறுதினம் திருமணம் நடக்க இருக்கிறது. கீர்த்தி ராஜ் இன்ஜினீயரிங் முடித்து விட்டு தற்போது துபாயில் பணியாற்றி வருகிறார். இந்த திருமணம் பெரியோர்களால் பார்த்து முடிக்கப்பட்ட திருமணமாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full