டிவில ‘மை நேம் இஸ் பில்லா’ பாட்டு போட்டாலே இந்த ட்ரெஸ்ஸ நான் போட்டுப்பேன் – கார்த்தி பகிர்ந்து சிறு வயது புகைப்படம்.

0
834
karthi
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த. சாமானிய ரசிகர்களை தாண்டி தமிழ் சினிமாவில் இருக்கும் எத்தனையோ நடிகர்கள் இவரின் ரசிகர்கள் தான். இவரை முன் மாதிரியாக வைத்து தான் பல நடிகர்கள் சினிமாவிற்கே வந்தனர். மேலும், பல நடிகர்கள் தங்களது படங்களில் இவரது ரெபரனஸை் பயன்படுத்தி இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் கார்த்தி நடித்த சகுனி படத்தில் தனது பெயரை கமல் என்றும் அவரது நண்பகராக வரும் சந்தானத்தின் பெயர் ரஜினி என்றும் வைத்திருப்பார்கள்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் நடிகர் கார்த்தி தான் சிறு வயதிலியே எந்த அளவிற்கு ரஜினி ரசிகர் என்பதை நிரூபிக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் கடந்த சில நாட்களாக தனது சமூக வலைதள பக்கத்தில் சில வின்டேஜ் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார.

இதையும் பாருங்க : நடிகர் ஸ்ரீகாந்த்தின் மகன் மற்றும் மகளா இது ? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.

- Advertisement -

அந்த வகையில் சிறு வயதில் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சிறு வயதில் எனக்கு மிகவும் பிடித்த ட்ரெஸ். டெனிம் ஜாக்கட் மற்றும் பேண்ட். எப்போதெல்லாம் ரஜினி சாரின் பில்லா படத்தில் இருந்து ‘மை நேம் இஸ் பில்லா’ பாடல் டிவியில் வருதோ அப்போதெல்லாம் இந்த ட்ரெஸ்ஸை போட்டுப்பேன் என்று தனது சிறு வயது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

நடிகர் கார்த்தி சென்னையில் உள்ள கிரேசன்ட் கல்லூரியில் தான் பொறியியல் படித்தார். அதன் பின்னர் தான் வெளிநாட்டில் படிக்கச் சென்றார். இப்படி ஒரு நிலையில் சென்னையில் படித்த போது தனது நண்பர்களுடன் பல்லவன் பேருந்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார் கார்த்தி. அதில் ‘பல்லவன், சென்னை மக்களின் நம்பிக்கையான நண்பன். என்னுடைய கல்லூரி நாட்கள் அதிகம் செலவிட்டது பேருந்தில் தான்’ என்று தனது நினைவுகளை பகிர்ந்து இருந்தார்.

-விளம்பரம்-

Advertisement