தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களாக ஜொலித்து வரும் எத்தனையோ பேர் ஆரம்பத்தில் துணை இயக்குனர்களாக பணிபுரிந்தவர்கள் தான். அந்த வகையில் இயக்குனர் மிஷ்கினும் ஒருவர். இயக்குனர் மிஸ்கின் திரைப்பட இயக்குநர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் முதலில் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின் இவர் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன் என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி உள்ளார்.

அந்த வகையில் இவரது இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ‘யுத்தம் செய்’ திரைப்படம் ஒரு கிரைம் திரில்லர் படமாக அமைந்து இருந்தது. சேரன் நாயகனாக நடித்த இந்த படத்தில் பிரபல நடிகை நதியாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பின்னர் விலகி இருக்கிறார். தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக கொடி கட்டி பறந்தவர் நடிகை நதியா.இவர் மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு அறிமுகமானர்.

Advertisement

எவர் கிரீன் நடிகை நதியா :

பின் இவர் 1985 ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதற்கு பிறகு உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, பாடு நிலாவே, ராஜாதி ராஜா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் 1988 ஆம் ஆண்டு சிரிஷ் காட்போலே என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார்.

யுத்தம் செய் :

நடிகை நதியா அவர்கள் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்ட இவர் M குமரன் S/o மகாலட்சுமி என்ற படத்தின் மூலம் மீண்டும் இவர் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் தமிழ்,தெலுங்கு ஆகிய மொழி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் மிஸ்கின் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பை மறுத்துள்ளார்.

Advertisement

நதியா விலகிய காரணம் :

சேரன் நடிப்பில் இவர் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ‘யுத்தம் செய் ‘ திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. இந்த படத்தில் அன்னபூர்ணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆனால், முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியது நதியா தான். இந்த படத்தில் மொட்டை அடிக்க வேண்டும் என்று மிஸ்கின் சொன்னதால் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார் நதியா.

Advertisement

நதியாவிற்கு பதில் லட்சுமி ராமகிருஷ்ணன் :

அதன் பின்னர் தான் இந்த படத்தில் மொட்டை தலையுடன் நடித்து நல்ல பாராட்டை பெற்றார் லட்சுமி ராமகிருஷ்ணன்.அதே போல தான் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் முதலில் ரம்யா கிருஷ்ணன் வேடத்தில் மிஷ்கினுடன் நடிகை நதியா தான் நடித்து உள்ளார். ஆனால், இரண்டு நாள் மட்டுமே நடித்துவிட்டு பின்னர் இந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டார் நதியா, இதனை இயக்குனர் மிஷ்கினே விருது மேடை ஒன்றில் கூறியுள்ளார்.

Advertisement