நாடோடிகள் பட நடிகர் திடீர் மரணம். சோகத்தில் கோலிவுட் வட்டாரம்.

0
45606
- Advertisement -

சமுத்திரக்கனி– சசிகுமார் கூட்டணியில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் கே.கே.பி கோபாலகிருஷ்ணன். இந்த படத்தில் நடிகை அனன்யாவின் தந்தையாக இவர் நடித்திருந்தார். இந்த படத்தில் சசிகுமாரிடம் இவர் ‘மாப்பிள இந்த கையில கவர்மெண்ட் ஆர்டர், இந்த கையில பொண்ணு’ என்று பேசிய வசனம் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. இந்த வசனத்தின் மூலமாக தான் இவருக்கு சினிமாவில் அடுத்து அடுத்து பட வாய்ப்பு கிடைத்தது என்று சொல்லலாம். இவரை ‘நாடோடிகள்’ கோபால் என்று தான் தமிழ்த் திரையுலகில் அழைக்கப்பட்டார்.

-விளம்பரம்-

இந்த நாடோடிகள் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், வேலையில்லா பட்டதாரி, சீமாராஜா உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து இருந்தார். மேலும், சமீபத்தில் வெளியான நாடோடிகள் 2 திரைப்படத்திலும் இவர் நடித்து இருந்தார். இவர் ஈரோட்டைச் சேர்ந்தவர். இவருக்கு தற்போது 54 வயது தான் ஆகிறது. இவருக்கு கவிதா என்ற மனைவியும், சுரபி மற்றும் ஷ்ரேயா என்ற மகள்களும் இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்நிலையில் பிரபல நடிகர் கே கே பி கோபாலகிருஷ்ணன் அவர்கள் உடல்நிலை குறைவால் தற்போது திடீரென்று உயிரிழந்து உள்ளார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனால் கோலிவுட் வட்டாரமே சோகத்தில் ஆழ்ந்து உள்ளது. இவர் தன்னுடைய சொந்த ஊரான குப்பகவுண்டம்பாளையத்தில் தனது வீட்டில் இருந்து உள்ளார். அப்போது இவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. இதனால் இவருடைய குடும்பத்தினர் இவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தார்கள். இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி நடிகர் கோபாலகிருஷ்ணன் உயிரிழந்தார்.

கோபாலகிருஷ்ணனின் திடீர் மறைவு அவருடைய குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. கடந்த சில தினங்களாகவே நடிகர் கே கே பி கோபாலகிருஷ்ணன் அவர்கள் உடல்நிலை குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கோபால கிருஷ்ணனின் மறைவுக்கு தமிழ் திரையுலக கலைஞர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நடிகர் கோபால கிருஷ்ணனின் மறைவிற்கு இயக்குனர் சமுத்திரக்கனி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்து உள்ளார். இவர் சமுத்திரகனியின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சமூக வலைத்தளங்களில் இவருடைய மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement