வெளிநாட்டு கிரிக்கெட் வீரருடன் காயத்ரிக்கு திருமணமா.! வைரலாகும் புகைப்படம்.!

0
710
gayathri

பிரபல தமிழ் திரைபட தயாரிப்பாளர் எஸ் எஸ் சக்ரவர்த்தியின் மகன் ஜானி நடித்த “18வயசு ” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை காயத்ரி ஷங்கர். தனது பள்ளி பருவ காலத்திலேயே கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் விஜய் சேதுபதியுடன் அதிக படத்தில் நடித்த நடிகை என்று பெயர் பெற்றவர்.

பெங்களூரில் வளர்ந்தாலும் இவரின் பூர்விக்கம் தமிழகம் தான். இவரது தாத்தா திருச்சியை சேர்ந்தவர். 1993 ஆம் ஆண்டு பிறந்த நடிகை காயத்ரி ஷங்கர் 2012 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “18 வயசு” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ” என்ற படத்திலும் நடித்தார்.

இதையும் பாருங்க : முதன் முறையாக வெளியான நடிகர் அப்பாஸ்ஸின் மனைவி மற்றும் பிள்ளைகளின் புகைப்படம்.!

அந்த படத்தில் “பா யாரு டா இந்த பொண்ணு பேய் மாதிரி இருக்கு” என்ற வசனத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். அந்த படத்திற்கு பின்னர்,”ரம்மி , புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் ” போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

Image result for russell wife

இந்த நிலையில் மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரே ரசலை காயத்திரி திருமணம் செய்து கொண்டதாக ஒரு புகைப்படம் வைரலானது. ஆனால், ரசல் மனைவி காயத்ரி போன்றே இருப்பதால் இப்படி ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்த புகைப்படத்தை கண்டு காயத்ரி ஷாக் அடைந்துள்ளார்.