நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் நிச்சயதார்த்தம் நடக்க இருக்கும் தகவல் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இதனிடையே நடிகர் சமந்தா அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமந்தா- நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள்.
சமந்தா- நாக சைதன்யா பிரிவு:
மேலும், இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பின், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், கருத்துக்களும் எழுந்த வண்ணம் இருந்தது. அதோடு இவர்களுடைய பிரிவுக்கு காரணம், 'ஊ சொல்றியா' என்ற பாடல் என்றும் பலருமை கூறியிருந்தார்கள். அந்தப் பாடலில் நடிகை சமந்தா பயங்கர கிளாமராக நடனமாடியிருந்தார். ஆனால், இதுவரை இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? ஏன் பிரிந்தார்கள்? என்று எந்த விவரம் தெரியவில்லை.
#SobhitaDhulipala#NagaChaitanya and #SobhitaDhulipala are getting engaged at his residence 💍#Twist - Naga chaitanya wants to get engaged on same day of his X wife love proposal #SamanthaRuthPrabhu𓃵 pic.twitter.com/vla5xNWJ9i
— FILM JOURNALIST VENKAT (@CinemaPosts) August 8, 2024
நாக சைதன்யா- சோபிதா துலிபாலா:
இவர்களின் விவாகரத்துக்கு பிறகு நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சோசியல் மீடியாவில் வதந்திகள் பரவியது. இவர்கள் இருவரும் வெளிநாடுகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. ஆனால், இது குறித்து இவர்கள் இருவரும் எந்த ஒரு விளக்கமோ கொடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்நிலையில் இன்று, நாக சைதன்யா- சோபிதா நிச்சயதார்த்தம் நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்று நிச்சயதார்த்தம்:
மேலும் இவர்களின் நிச்சயதார்த்தம், நடிகர் நாக சைதன்யாவின் வீட்டில் நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது மட்டும் இல்லாமல், இந்த நாள் தான் நாகச் சைதன்யா மற்றும் சமந்தா தங்களது காதலை தெரிவித்துக் கொண்ட நாளாம். அதற்காக, இதே நாளில் சோபித்தாவுடன நிச்சயதார்த்தம் நடக்க வேண்டும் என்று நாக சைதன்யா விரும்புவதாக சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி உள்ளது. தற்போது இந்தச் செய்தி தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாக சைதன்யா குறித்து:
தெலுங்கு சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஜோஸ்' என்ற படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகம் ஆனார். மேலும், கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு பதிப்பு மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்த படத்தின் மூலம்தான் நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது என்பது நாம் அறிந்த விஷயமே.






