உதட்டருகில் முத்தம் கொடுக்கும் சாய் பல்லவி. திக்குமுக்காகும் சமந்தாவின் புருஷன். ரொமான்டிக் பாடலின் வீடியோ.

0
8785
saipallavi
- Advertisement -

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார் நடிகர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக கலக்கிய நாகார்ஜுன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கு திருமணமானது. இது அனைவருக்கும் தெரிந்ததே. திருமணத்திற்கு பிறகும் இவர்கள் இருவரும் பிசியாக படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கு திரை உலகின் முன்னணி இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யா, சாய்பல்லவி நடித்து உள்ள படம் லவ் ஸ்டோரி.

-விளம்பரம்-

ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையேயான காதலை அழகாக கூறியிருக்கிறார் இயக்குனர். கிராமத்தில் தொடங்கி நகரத்தை நோக்கி இவர்களுடைய காதல் பயணம் தொடர்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க பக்கா தெலுங்கானா கலாச்சாரம் பாணியில் உள்ளது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் மியூசிக் ஆல்பத்தை தயாரித்த பவன் என்பவர் தான் இசை அமைத்து உள்ளார். மேலும், இன்று காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தில் ஒரு சூப்பர் ரொமான்டிக் பாடலை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.

- Advertisement -

ஏய் பில்லா என தொடங்கும் இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் ஒரு காட்சியில் நாகசைதன்யா அவர்களின் கண்ணத்தில் சாய்பல்லவி அவர்கள் அழுத்தமாக முத்தம் இடுகிறார். அதுக்கு நாக சைதன்யா அவர்கள் தரும் ரியாக்ஷன் பத்தி சொல்லவே வார்த்தை இல்லை. முத்தம் கொடுத்தவுடன் சந்தோஷம் படுவதை தான் நாம் பார்த்து இருப்போம். ஆனால், நாக சைதன்யா அவர்கள் முத்தம் கொடுத்த உடன் அவர் கண்களில் கண்ணீர் வழிகிறது.

Image result for naga chaitanya sai pallavi

-விளம்பரம்-

அந்த அளவிற்கு ரொமான்டிக்கை அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் அம்சங்களை கொண்ட கதைகளும். இந்த படத்தில் வழக்கம் போல் நம்ம (சாய் பல்லவி) மலர் டீச்சர் எந்தவித மேக்கப்பும் இல்லாமல் எதார்த்தமாக நடித்து உள்ளார். இந்த படத்தின் மீது ரசிகர்கள் அதிக ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார்கள். இந்த பாடலை படத்தை ரசிகர்கள் அனைவரும் இதை சமந்தா பார்த்த என்னாவது?? என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement