நாக சைதன்யாவின் பதிவிற்கு சமந்தா ரசிகர்கள் போட்டிருக்கும் கமெண்ட்ஸ் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் நாக சைதன்யா- சோபிதா திருமணம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மகன் ஆவார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

இதனிடையே நாக சைதன்யா- சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.
இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா-நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிந்திருந்தார்கள். இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
நாக சைதன்யா- சோபிதா துலிபாலா காதல்:
இதுவரை இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? ஏன் பிரிந்தார்கள்? என்று எந்த விவரமும் தெரியவில்லை.
இவர்களின் விவாகரத்திற்கு பிறகு நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சோசியல் மீடியாவில் செய்திகள் பரவி இருந்தது. அதோடு இவர்கள் இருவரும் வெளிநாடுகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி இருந்தது. ஆனால், இது குறித்து இவர்கள் இருவரும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

நாக சைதன்யா-சோபித்தா நிச்சயதார்த்தம்:
சமீபத்தில் தான் நாக சைதன்யா-சோபித்தா நிச்சயதார்த்தம் நாக சைதன்யாவின் வீட்டில் எளிமையாக நடந்தது. இது தொடர்பாக நாகார்ஜுனா பதிவு போட்டு இருந்தார். பின் சோசியல் மீடியா முழுவதும் இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் தான் வைரலாகி இருந்தது. கூடிய விரைவில் இவர்களின் திருமண தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆனால், சமந்தா ரசிகர்கள் நாக சைதன்யாவை விமர்சித்து இருந்தார்கள்.
View this post on Instagram
நாக சைதன்யா பதிவு:
மேலும், திருமணத்திற்கான வேலைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. அதோடு நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு நாக சைதன்யா-சோபிதா இருவருமே சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிரவே இல்லை. இப்படி இருக்கும் நிலையில் தற்போது நாக சைதன்யா- சோபிதா இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் கருத்து:
இதை பார்த்து சமந்தாவின் ரசிகர்கள், ஷாம் தான் உங்களுக்கு பெஸ்ட் couple. எதற்காக இவர்களை தேர்ந்தெடுத்தீர்கள்? நீங்களே உங்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டீர்கள் என்றெல்லாம் கமெண்ட் போட்டு இருக்கிறார்கள். தற்போது ரசிகர்கள் நாக சைதன்யாவை விமர்சித்து போடும் பதிவு தான் இணையத்தில் வருகிறது.






