விமான நிலையத்தில் தனது பாதுகாவலகர்கள் தள்ளிவிடப்பட்ட ஊழியரை நேரில் சந்தித்துள்ள நாகர்ஜூனாவின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் நாகர்ஜுனா ஒருவர். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து வருகிறது. தற்போதும் இவர் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் மட்டுமல்லாது இவர் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பல ரசிகர்களை கொண்டுள்ளார்.
https://www.youtube.com/shorts/SbMEVpJK4w4
2022 ஆண்டு கோஷ்ட் படத்தில் நடித்து இருந்தார். தற்போது குபேரா படத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு நாகர்ஜுனா அவர்கள் ஏர்போர்ட் வந்திருந்தார். அப்போது அவர் அருகில் ரசிகர் ஒருவர் போட்டோ எடுக்க சென்றிருக்கிறார். உடனே நாகார்ஜுனாவின் பாதுகாவலர் அவரைத் தள்ளிவிட்டு இருக்கிறார். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நாகர்ஜுனா அமைதியாக வந்துவிட்டார்.
அந்த வீடியோ தான் இணையத்தில் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது. அதை பார்த்த பலருமே, நாகர்ஜுனாவை கண்டித்து இப்படியெல்லாம் நடந்து கொள்வதா? என்று திட்டியும் இருந்தார்கள். அதற்கு பின் நாகர்ஜுனா, நான் அதை கவனிக்கவில்லை. இனிமேல் இந்த மாதிரி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்றெல்லாம் பதிவு ஒன்றை போட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/manav22/status/1805895808585449574
இப்படி ஒரு நிலையில் மீண்டும் விமான நிலையம் வந்த நாகர்ஜுனா, தனது பாதுகாவலர்கள் தள்ளிவிட்ட அந்த முதிவயரை நேரில் சந்தித்து அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார். அப்போது அந்த பெரியவர் நடந்த சம்பத்திற்கு மன்னிப்பு கேட்ட நிலையில் இதில் உங்கள் தப்பு ஒன்றும் இல்லை என்று கூறி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் செய்த தவறை திருத்திக்கொண்டு நாகர்ஜுனாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க தனுஷை நெட்டிசன்கள் திட்டி வரும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அதாவது, நேற்று ஜுஹு பீச்சில் சூட்டிங்க்காக தனுஷ் வந்திருந்தார். அவர் நடந்து வரும் போது ரசிகர்கள் போனில் அவரை போட்டோ எடுக்க முயன்று இருந்தார்கள். அப்போது தனுஷுடன் இருந்த பாதுகாவலர்கள் அவர்களை தள்ளிவிட்டு இருக்கிறார்கள். அதை தனுஷும் கண்டுகொள்ளாமல் சென்றிருந்தார்.
View this post on Instagram
இந்த வீடியோவை தான் நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து திட்டி வருகிறார்கள்.பொது இடத்தில் சூட்டிங் நடந்தால் மக்களை இப்படித்தான் நடத்துவீர்களா? உங்கள் மீது இருக்கும் பிரியத்தில் தானே வருகிறார்கள். ஏன் இப்படி எல்லாம் கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் நடந்து கொள்கிறீர்கள் என்றெல்லாம் கண்டித்து வருகிறார்கள். இதற்கு தனுஷ் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.





