தன்னுடைய வருங்கால மருமகளை நாகர்ஜுனா வர்ணித்து பேசியிருக்கும் பழைய வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மகன் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஜோஸ்' என்ற படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகம் ஆனார். பின் கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு பதிப்பு மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.

இந்த படத்தின் மூலம் தான் நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது.
அதன் பின், இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் சந்தோஷமாக தனது குடும்ப வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தார்கள். அதோடு இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா- நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள்.
சமந்தா- நாக சைதன்யா பிரிவு:
மேலும், இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பின், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், கருத்துக்களும் எழுந்த வண்ணம் இருந்தது. அதோடு இவர்களுடைய பிரிவுக்கு காரணம், 'ஊ சொல்றியா' என்ற பாடல் என்றும் பலருமே கூறியிருந்தார்கள். அந்தப் பாடலில் நடிகை சமந்தா பயங்கர கிளாமராக நடனமாடியிருந்தார். ஆனால், இதுவரை இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? ஏன் பிரிந்தார்கள்? என்று எந்த விவரம் தெரியவில்லை.

நாக சைதன்யா- சோபிதா துலிபாலா காதல்:
இவர்களின் விவாகரத்துக்கு பிறகு நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சோசியல் மீடியாவில் வதந்திகள் பரவியது. இவர்கள் இருவரும் வெளிநாடுகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. ஆனால், இது குறித்து இவர்கள் இருவரும் எந்த ஒரு விளக்கமோ கொடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்நிலையில் இன்று, நாக சைதன்யா- சோபிதா நிச்சயதார்த்தம் நடந்தது.

நாக சைதன்யா- சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம்:
மேலும், இவர்களின் நிச்சயதார்த்தம் நாக சைதன்யாவின் வீட்டில் நடந்தது. அதோடு இந்த நாள் தான் நாகச் சைதன்யா மற்றும் சமந்தா தங்களது காதலை தெரிவித்துக் கொண்ட நாளாம். அதற்காக, இதே நாளில் சோபித்தாவுடன நிச்சயதார்த்தம் நடக்க வேண்டும் என்று நாக சைதன்யா விரும்பி இருந்தாக சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி இருந்தது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் தான் வைரலாகி வருகிறது.
Sir do you still find your daughter in law HOT ?? 😭😭 https://t.co/0vLND8hmkT pic.twitter.com/8QDC5AKc7A
— sach🏹 (@vardaanvibe) August 8, 2024
நாகார்ஜுனா பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய வருங்கால மருமகள் சோபிதா குறித்து நாகர்ஜுனா பேசியிருக்கும் பழைய வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சோபிதா ரொம்ப அழகான பெண். அதோடு அவர் ரொம்ப ஹாட். எல்லோருக்குமே அவளை ரொம்ப பிடிக்கும். கண்டிப்பாக இதை சொல்லணும் என்று பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோவை நாக சைதன்யா நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் நெட்டிசன்கள் இணையத்தில் வைரலாக்கி ட்ரோல் செய்து வருகிறார்கள்.






