நடிகை தேவையானி குறித்து நகுல் பற்றி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் தேவயானி. 1993 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது வரை நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் உள்ள விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் தேவயானி நடித்திருக்கிறார்.

மேலும் இவர் தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக நடிகை தேவயானி அவர்கள் சினிமா உலகில் இந்த அளவிற்கு பிரபலமாக இருப்பதற்கு காரணம் இயக்குனர் ராஜகுமாரன் தான். தேவயானியும், இயக்குனர் ராஜகுமாரனும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள். தற்போது தேவயானி பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வெள்ளித்திரை மட்டுமில்லாமல் இவர் சின்ன திரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார்.
தேவயானி குறித்த தகவல்:
குறிப்பாக இவர் நடித்த ‘கோலங்கள்’ சீரியல் 6 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. இதை அடுத்து இவர் சீரியல், படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தேவயானி அவர்கள் நிழற்குடை என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை தர்ஷன் ஃபிலிம் சார்பில் ஜோதி ஜீவா என்பவர் தயாரித்திருக்கிறார். இந்த படத்தை சிவா ஆறுமுகம் என்பவர் எழுதி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜித், கண்மணி, இளவரசு, ராஜ் கபூர், வடிவுக்கரசி, நீலிமா உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள்.

நகுல் பேட்டி:
இந்த படம் வரும் மே 9ஆம் தேதி திரையரங்களில் வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா நடைபெற்று இருந்தது. அதில் நடிகரும் தேவயானியின் தம்பியுமான நகுல் கலந்து கொண்டிருந்தார். அப்போது நகல், என்னுடைய அக்கா தேவையானிக்கு நான் தம்பியாக பிறந்ததை பாக்கியமாக பார்க்கிறேன். சின்ன வயதில் இருந்தே அக்கா ரொம்ப கடினமாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்.
தேவையானி குறித்த தகவல்:
எப்போதுமே அவரிடம் ஆட்டிட்யூடே இருக்காது. என்னுடைய அக்காவை பார்த்தால் எனக்கு அம்மா மாதிரி தான் தோன்றும். அவர் ரொம்பவே தன்னடக்கம் ஆக இருப்பார். இந்த கதை கூட அக்காவிற்கு பொருத்தமாக சிறப்பாக பொருந்தும். என்னுடைய வாழ்க்கையில் அக்கா மாதிரி நபரை நான் பார்த்ததே கிடையாது. தன்னுடைய கேரியர், குடும்பத்தை சரியாக அக்கா கையாளுகிறார். கதையை கூட சிறப்பாக தான் தேர்வு செய்வார். மூணு மாதம் டைரக்சன் கற்றுக்கொண்டார். கைகுட்டை ராணி என்ற குறும்படத்தையும் இயக்கியிருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=ENzaH9pT1Xg
தேவையானி பற்றி சொன்னது:
அந்த படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருக்கிறது. என்னுடைய அக்கா இப்போது நடிகை மட்டும் இல்ல ஒரு இயக்குனரும். அதை நான் ரொம்ப பெருமையாக சொல்வேன். யூ ஆர் பெஸ்ட் அக்கா என்று ரொம்ப பெருமையாக தன்னுடைய அக்காவை பாராட்டி பேசி இருக்கிறார். இதைக் கேட்டு தேவயானி ரொம்பவே மகிழ்ந்து போய்விட்டார். தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக நகல் திகழ்ந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் இவருடைய படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், சமீப காலமாக இவருடைய படங்கள் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை. இருந்தும் விடாமல் நல்ல ஒரு கம்பேக்காக நகுல் காத்துக் கொண்டிருக்கிறார்.






