திருப்பதியில் விஐபி தரிசனத்தில் சென்றும் புலம்பிய நமீதா – வைரலாகும் வீடியோ.

0
1291
namitha
- Advertisement -

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நமீதா தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளார். தமிழ் சினிமாவில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை நமிதா. தமிழ் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் நடிகை நமிதா.தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர் நடிகை நமீதா.. பின் தமிழ் சினிமாவில் விஜய்,அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

2017 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி தனது காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை நடிகை நமீதா திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சினிமா வாய்ப்புகளுக்காக போராடி வருகிறார் நடிகை நமீதா. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லமால் கவலையில் உள்ளார் நடிகை நமீதா.பின் சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார்.

- Advertisement -

அதே போல நடிகை நமீதா பா ஜ க கட்சியிலும் சேர்ந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகை நமிதா சமீபத்தில் தனது கணவருடன் திருப்பதிக்கு சென்று உள்ளார். அங்கே அவர் விஐபி தரிசனம் மூலம் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து உள்ளார். கோவிலுக்குள் இருந்து வெளியில் வந்த நமீதா பத்திரிகையாளர்களை சந்தித்த போது, ‘‘ஏழுமலையானை தரிசனம் செய்தது சந்தோஷமாக இருந்தது. இதற்கு முன்பு வந்தபோது தரிசன ஏற்பாடுகள் நன்றாக இருந்தது. ஆனால் தற்போது கோயிலில் தரிசன ஏற்பாடுகள் சரியில்லை என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் நடிகை நமிதா தனது கணவருடன் சேர்ந்து பா ஜ க சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால், நமீதா பிரச்சாரத்திற்கு சென்ற போது வேட்பாளர்கள் யாரும் வராததால் கடுப்பான நமிதா பிரச்சார பயணத்தை ரத்து செய்துவிட்டு திரும்பினார். இதனால் அவரை பாஜாகாவினர் மீண்டும் பிரச்சாரம் செய்ய வருமாறு அழைப்பு விடுத்தனர். அப்போது பேசிய நமிதாவின் கணவர் வேட்பாளர் இல்லாமல் இனிமேல் எங்களை வாக்கு சேகரிக்க அழைக்காதீர்கள் நாங்கள் சென்னை செல்ல இருக்கிறோம் என்று கையெடுத்து கும்பிட்டு விட்டு கிளம்பிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement