நண்பன் படத்தில் வந்த மில்லி மீட்டரா இது – உண்மையா இப்போ சென்டிமீட்டர் ஆகிட்டாரு. எப்படி இருக்கார் பாருங்க.

0
2886
- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் அடுத்த சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தளபதி விஜய். மேலும், தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘நண்பன்’ படத்தில் மில்லி மீட்டராக இருந்தவர் தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு சென்டிமீட்டர் ஆக மாறிவிட்டார் என்று பல விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. மேலும், மில்லி மீட்டர் வளர்ந்து விட்டாரா!! என்ற வியப்பிலும் கேள்வி கேட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள். உண்மையிலேயே மில்லி மீட்டர் பெயர் ரின்சன் சைமன் ஆகும். தமிழ் சினிமா திரை உலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது சங்கர் தான். மேலும், இயக்குனர் சங்கர் அவர்கள் இயக்கத்தில் தளபதி விஜய், இலியானா, சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த் உட்பட பல நடிகர்கள் நடிப்பில் வெளிவந்த படம் தான் “நண்பன்”.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is rinsan.jpg

இந்த படம் கடந்த 2012 ஆம் ஆண்டு திரை உலகிற்கு வெளி வந்தது. நண்பன் படம் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் என்று கூட சொல்லலாம். இந்த திரைப்படம் ‘3 இடியட்ஸ்’ என்று ஹிந்தியில் 2009 ஆம் ஆண்டு வந்த படமாகும். இந்த படத்தை தமிழில் கொஞ்சம் மாடுலேஷன் செய்து வெளியிட்டார்கள். மேலும்,நண்பன் படத்தில் மில்லி மீட்டர் என்ற சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ரின்சன் சைமன். தற்போது இவர் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்து உள்ளார் என்ற கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டிருக்கின்றது. நடிகர் ரின்சன் சைமன் சிறு வயதிலிருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் உடையவர். இதுமட்டும் இல்லாமல் இவருக்கு நடனத்திலும் அதிக ஆர்வம்.

- Advertisement -

இதனாலேயே இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர்-1 ,பாய்ஸ் vs கேர்ள்ஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் தன்னுடைய நடன திறமையை காண்பித்து உள்ளார். மேலும், பலரையும் இவருடைய திறமையால் திரும்பிப் பார்க்க வைத்து உள்ளார். இதனை தொடர்ந்து இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நோக்கி பயணம் செய்தார். இதையடுத்து நடிகர் ரின்சன் சைமன் ‘சுட்ட கதை, நலனும் நந்தினியும், ரெட்டைசுழி, நண்பன், பா. பாண்டி உட்பட பல படங்களில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி உள்ளார். இப்படி தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தாலும் இவரை நண்பன் படத்தின் மூலம் தான் அதிகமாக பிரபலமானார்.

Image result for vijay tv rinson"

நண்பன் படத்தின் மூலம் தான் இவர் மக்களிடையே அதிகமாக பேசப்பட்டார் என்று கூட சொல்லலாம். தற்போது நடிகர் ரின்சன் சைமன் அவர்கள் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ஸ்டைல்லைப் பின்பற்றி குறும் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார் என்ற தகவல் இணையங்களில் வெளிவந்து உள்ளது. மேலும்,நடிகர் ரின்சன் சைமன் திரைப் படங்களில் ஹீரோவாகவும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அவருடைய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளிவந்தது. இதை பார்த்து அனைவரும் மில்லி மீட்டரா!! என்று வியப்பிலும்,ஆச்சிரியத்திலும் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், நண்பன் படத்தில் மீசை, தாடி இல்லாமல் மிகவும் ஒல்லியாக காணப்பட்ட ரின்சன் சைமன் தற்போது ஆச்சரியப்படும் அளவிற்கு தாடி, மீசை என மாஸ் கெட்டப்பில் தோற்றமளிக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement