கடந்த சில நாட்களாகவே நெப்போலியன் மகனின் திருமணம் குறித்த செய்திகள் தான் சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நெப்போலியன். இவர் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தனுஷ், குணால் என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் நெப்போலியன் மூத்த மகன் தனுஷ், மஸ்குலர் டிஸ்ட்ரோஃபி என்ற தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தனது மகனின் சிகிச்சைக்காக இந்தியாவை விட்டுச் சென்று குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார் நெப்போலியன்.
அமெரிக்காவில் நெப்போலியன் ஹைடெக் விவசாயம் செய்வதோடு, ஒரு மென்பொருள் நிறுவனத்தை தொடங்கி அதற்கு தனுஷை முதலாளி ஆக்கியிருக்கிறார். அந்த நிறுவனத்தில் தமிழர்கள் ஏகப்பட்ட பேர் பணி புரிவதாக கூறப்படுகிறது. அமர்ந்த இடத்திலிருந்து தொழில்நுட்பத்தின் வசதியோடு அந்த நிறுவனத்தை நிர்வாகித்து வருகிறார் தனுஷ். இப்படிப்பட்ட சூழலில் தனுஷுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து, சமீபத்தில் தான் அவருக்கு திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டியை சேர்ந்த விவேகானந்தர் என்பவரின் மகள் அக்ஷயாவோடு நிச்சயதார்த்தம் நடந்தது. அதோடு தனுஷ் இந்தியாவிற்கு வர முடியாததால் வீடியோ கால் மூலமாக தான் நிச்சயதார்த்தம் நடந்தது.
தனுஷ் நிச்சயதார்த்தம்:
பின், இவர்களது திருமணம் ஜப்பானில் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே நெப்போலியன் குடும்பம் அமெரிக்காவிலிருந்து ஜப்பான் புறப்பட்டு இருந்தார்கள். இத்திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கலா மாஸ்டர், ராதிகா, சரத்குமார், மீனா, பாண்டியராஜன், யூடியூபர் இர்ஃபான் என பல பிரபலங்கள் ஜப்பானுக்கு படையெடுத்தனர். மேலும், திருமணத்துக்கு முன்பாக நலங்கு, ஹல்தி உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டது. பின்பு மணமக்கள் தனுஷ் மட்டும் அக்ஷயாவிற்கு போட்டோஷாப் நடத்தப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் தனுஷ்-அக்ஷ்யா திருமணம் கோலாகலமாய் தமிழர்களின் கலாச்சாரப்படி நடந்தது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் எல்லோரும் வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார்கள்.
நெப்போலியன் பேட்டி:
இந்நிலையில் மகனுக்கு திருமணம் முடிந்து நெப்போலியன் அளித்த பேட்டியில், தனுசுக்கு ஜப்பான் போக வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. அதனால் நாங்கள் ட்ரிப் ஏற்பாடு செய்திருந்தோம். அப்போது தான் அவருக்கு பெண் கிடைத்துவிட்டதாக தகவல் வந்தது. இரண்டுமே ஒரே நேரத்தில் கைகூடி வந்ததால் ஜப்பானில் கல்யாணத்தை வைத்தோம். அதேபோல் எங்களுடைய மருமகள் அக்ஷயாவை தேர்ந்தெடுக்க பல கட்டங்களை தாண்டி வந்தோம். என்னுடைய மாமனார் தரப்பிலிருந்து தான் அக்ஷயாவை எங்களுக்கு தெரியும். அவருக்கு தனுசை பற்றி நன்றாக தெரிந்ததால் தான் திருமணத்திற்கும் சம்மதித்தார். இருந்தாலுமே, எங்களுக்கு அதில் நம்பிக்கை இல்லை.
தனுஷ் திருமணம் குறித்து சொன்னது:
உடனே நான் என்னுடைய அண்ணனை நேரடியாக அனுப்பி அக்ஷயா குடும்பத்தை பார்க்க சொல்லி அவரிடம் பேச சொன்னேன். பின் நானும் என்னுடைய மனைவியும் சென்று அக்ஷயாவிடம் பேசினோம். அப்போது, நீ விரும்பி தானே இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கொள்கிறாய்? யாராவது கட்டாயப்படுத்துகிறார்களா? என்று கேட்டதற்கு அவர், எனக்கு தனுசை பிடிக்கும். அதனால்தான் இந்த கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்டேன் என்று வெளிப்படையாகவே சொன்னார். அதனால் தான் நாங்களும் இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்தோம். அக்ஷயா ரொம்ப தங்கமான பொண்ணு. அவர் ரொம்ப பொறுமைசாலி.
சஷ்டி விரதம்:
அது மட்டும் இல்லாமல் நாங்கள் கல்யாணம் செய்த பிறகு எல்லா இடத்திலுமே என்னுடைய மனைவியை அழைத்து செல்வேன். அதனால் பலமுறை கருச்சிதைவை நடந்தது. அதனால் மருத்துவர் அவரை டிராவல் செய்ய வேண்டாம் என்று சொன்னதனால் பல வருடங்கள் கழித்து தான் எங்களுக்கு தனுஷ் பிறந்தார். அதனால்தான் அவர் எப்போதுமே எங்களுக்கு ஸ்பெஷலான குழந்தை. அதேபோல் தனுஷுக்கு நல்லபடியாக திருமணமாக வேண்டும் என்று என்னுடைய மனைவி சஷ்டி விரதம் இருந்தார். அவருடைய வேண்டுதல் நிறைவேறி இந்த சஷ்டியில் தனுஷருக்கு நல்லபடியாக திருமணமும் நடந்தது. அதை என்னுடைய மனைவி விடாமல் கடைப்பிடித்தும் வருகிறார் என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருக்கிறார்.