JEANS-லாம் போடணும்னு ஆசைப்பட்ட நரிக்குறவர் சாக்லேட் - ஆசையை நிறைவேற்றிய யூடுயூப் சேனல். குவியும் பாராட்டுக்கள்.

By Rajkumar · 26/9/2021

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக ஒட்டுமொத்த உலகையும் கொரோனா என்ற கொடிய வைரஸ் ஆட்டி வைத்து கொண்டிருக்கின்றது. கொரோனா வைரஸினால் லட்சக்கணக்கான பேர் உயிரிழந்தும், பாதிக்கப்பட்டும் வருகின்றனர். இன்னும் கூட இந்த கொரோனா வைரஸின் தாக்கம் உலகை விட்டுப் போகவில்லை. மேலும், கொரோனாவினால் பல உயிர்கள் இறந்து கொண்டிருக்கும் நிலையில் பல உயிர்கள் தங்களுடைய அன்றாடத் தேவைகளுக்காக போராடி வருகின்றனர். அதிலும் நடுத்தர மக்கள் தொடங்கி நரிக்குறவர் என பல ஏழை மக்கள் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

https://www.youtube.com/watch?v=D-fabv2pbAg

இவர்கள் தங்களுடைய அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் பல கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பெண் சாக்லேட் என்பவர் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அவர் பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில் செம வைரல் ஆனது. இதை தொடர்ந்து பிரபல பத்திரிக்கை சேனல் ஒன்று சாக்லேட் இடம் பேட்டி எடுத்திருந்தார்கள். அதில் அவர் தங்களுடைய இனத்தை குறித்தும் தன்னுடைய வாழ்க்கை முறை குறித்தும் பேசி இருந்தார்.

இதையும் பாருங்க : ஷங்கர் மகளை தொடர்ந்து நாயகியாக களமிறங்கும் அஜித் பட இயக்குனரின் மகள்.

அதில் அவர் கூறியிருந்தது, எங்களுக்கும் உங்களை போன்ற நல்ல ஆடை அணிந்து படங்களுக்கு செல்ல வேண்டும். வெளியே இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால், எங்களால் முடியவில்லை. அப்போதிலிருந்து இப்போ வரை நாங்கள் இன்னும் குப்பைதான் பெருக்கிக் கொண்டிருக்கும். எங்கள் குழந்தைகளாவது இனிமேல் நன்றாக படித்து வேலைக்கு செல்ல வேண்டும். எனக்கும் உங்களைப் போல் ஜீன்ஸ், பேண்ட் போடனும் என்ற ஆசை இருக்கு என்று கூறி இருந்தார்.

https://www.youtube.com/watch?v=k6BqQy2BW0g

இந்நிலையில் தற்போது சாக்லேட் ஆசைப்பட்ட ஒரு சிறிய விஷயத்தை பேட்டி எடுத்த பத்திரிக்கை சேனல் பூர்த்தி செய்து உள்ளார்கள். அவர்கள் மீண்டும் சாக்லேட்டை சந்தித்து அவர் ஆசைப்பட்ட மாதிரி பியூட்டி பார்லருக்கு கூட்டி சென்று அவருக்கு மேக்கப் செய்து ஜீன்ஸ், பேண்ட் என்று மாடர்ன் ஆடைகளை போட்டு போட்டோ சூடு நடத்தியுள்ளார்கள். தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. மேலும், இந்த வீடியோ மூலமாவது இவர்களுடைய வாழ்க்கை தரம் எதிர் காலத்தில் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

behindtalkies AMP · Quick view
View full