பொதுவாகவே சினிமா துறையில் காலங்காலமாகவே வரிசைகளை அறிமுகப்படுத்துவது வழக்கமான ஒன்று தான். மொத்த இந்திய திரையுலகமே வாரிசுகளால் நிறைந்திருக்கிறது என்று சொல்லலாம். அதில் ஆண்கள் மட்டுமில்லை பெண் வாரிசுகளும் உள்ளனர். அந்தவகையில் தற்போது திரை உலகில் பெண் வாரிசுகள் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். ஹிந்தியில் தொடங்கி மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழி சினிமா உலகிலும் நடிகர்கள் தங்களுடைய வாரிசுகளை அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழ் மொழி மட்டும் என்ன விதிவிலக்கா! இந்நிலையில் தற்போது பிரபல இயக்குனர் ராஜீவ்மேனன் அவர்களின் மகள் கதாநாயகியாக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆக இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய திரைப்படத் துறையில் மிகப் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர் தான் ராஜீவ்மேனன். இவர் பல இந்திய மொழித் திரைப்படங்களில் இயக்குனராகவும், ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இதையும் பாருங்க : வெளியானது விஜய் 66 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு – இயக்குனர் இவர் தானாம்.
மணிரத்னம் படமான பாம்பே திரைப்படத்தின் மூலம் தான் ராஜீவ்மேனன் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார். கடைசியாக இவர் சர்வம் தாளமயம் என்ற படத்தை இயக்கி தயாரித்து இருந்தார். மேலும், இவருக்கு சரஸ்வதி மற்றும் லக்ஷ்மி என இரண்டு மகள்கள் உள்ளார்கள். இவருடைய மகள் சரஸ்வதி என்பவர் ஏற்கனவே இவர் கடைசியாக இயக்கிய சர்வம் தாளமயம் படத்தில் ஒரு பாடல் காட்சிக்கு ஆடி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது இவர் வசந்த் ரவி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். வசந்த் ரவி என்பவர் தரமணியில் அறிமுகமானவர். இவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ராக்கி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. மேலும், இயக்குனர் ராஜீவ் மேனனின் மகள் நடிக்கும் படம் குறித்த தகவல்கள் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.